அரசாங்கம் தமிழ்மக்களின் தனியார் காணிகளை பெருமளவில் உள்ளடக்கியதான உயர் பாதுகாப்பு மண்டலப் பிரகடனங்களை செய்வதன் மூலம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு நிலப்பரப்பை ஆக்கிரமித்து வருவது ஒரு புதிய நடைமுறை அல்ல. அரசாங்கம் குறைந்தது 1990 ஆம் ஆண்டிலிருந்து வடக்கு மற்றும் கிழக்கில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் இத்தகைய சட்டவிரோத எல்லை நிர்ணயம் செய்துவருகின்றது. இவற்றிற்கு எதிராக சுமந்திரன் அவர்களால் அவ்வபோதே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மாவை சேனாதிராஜா எதிர். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (SC FR 646/2003)
இவர் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு 12 வருடங்களுக்கு முன்னராகவே இலவசமாக செய்த வழக்கு அது. (SC FR 646/2003) உயர் பாதுகாப்பு வலயங்களின் பிரகடனத்தின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட முதல் வழக்கு. 20 வருடங்களா இந்த வழக்கு நடத்தப்பட்டு வந்தது. மேலும் அறிய...
மீள்குடியேற்றதிற்கான இடைக்கால உத்தரவு
2007 ஆம் ஆண்டு, மேற்படி வழக்கில், நீதிமன்றம் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் உரிமையாளர்களை மீள்குடியேற அனுமதிக்க இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அப்படித்தான் மீள்குடியேற்றம் தொடங்கியது, அது நீதிமன்றங்களால் கண்காணிக்கப்பட்டது.● நீதிமன்றால் முன்மொழியப்பட்ட முன்மொழிவு குறித்து பாதுகாப்புப் படை மற்றும் மாவட்டச் செயலாளர் யாழ். கே. கணேஷிடம் இருந்து அறிவுறுத்தல்களைப் பெறுமாறு அரசுக்கு உத்தரவிட்டது. ● இதையடுத்து, மனுதாரரில் எத்தனை பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறித்து கணேஷிடம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ● மனுதாரர் தனது தனிப்பட்ட சார்பாக மட்டுமல்ல, இதேபோன்ற சூழ்நிலையில் உள்ள மற்றவர்களின் சார்பாகவும் விண்ணப்பத்தை தாக்கல் செய்ததாக மனுதாரர் குறிப்பிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ● பிரதேச செயலாளரின் அறிக்கையை சமர்ப்பிக்க பல ஒத்திவைப்புகள் வழங்கப்பட்டன.
அரசின் சச்சைக்குரிய காணிச் சுற்றறிக்கைக்கு நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை
'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலங்களை நிர்வகிப்பது தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல்’ என்ற சுற்றறிக்கைக்கு (2011/04) எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றில். மேலும் அறிய...
மேலும் பல வழக்குகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பதியப்பட்டன
2003 ஆம் ஆண்டு முதல் உயர் பாதுகாப்பு வலயமாக பயன்படுத்தப்பட்டு வரும் 6.138 ஏக்கர் தனியார் காணிகளை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை எதிர்த்து, 2,176 மனுதாரர்களால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பதியப்பட்ட வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.
மைத்திரி-ரணில் ஆட்சிகாலப் பகுதியில்
குறிப்பாக 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் பல ஏக்கர் காணிகள் பொதுமக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது. வலிவடக்கில் மட்டும் 3495.8 ஏக்கர் காணி (53.4%) இக்காலப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலம் சார்ந்த பிரச்சினைகள் பல பரிமாணங்களை தழுவி மக்களுடைய உரிமைகளை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் மக்கள் நாடிய அரசியல் தலைவர்களில் ஒருவரே சுமந்திரன் ஆவார். எல்லா அரசியல் தலைவர்களும் மக்களுடன் அரசியல் இலாப நோக்கங்களுக்காக மாத்திரம் தொடர்பு கொள்ளும் வேளைகளில் அரசியலை தாண்டி சமூக பொருளாதார பிரச்சினைகளுக்காக நீதிமன்றில் பொதுநல வழக்குகளை தொடுத்தவர் சுமந்திரன் ஆவார். மூத்த சட்டத்தரணியாகவும் அரசியல் தலைவராகவும், முக்கியமாக மனித உரிமை ஆர்வலருமாக தனது கடைமைகளை நிறைவேற்றும் இவரின் தலைமைத்துவம் மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்க ஒரு போதும் மறுதலித்தது இல்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களது தனியார் காணிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டு இராணுவத்திடம் பாதுகாப்பு நோக்கங்களுக்காக கைப்பற்றப்பட்ட போது அந்த காணிகளை மக்களிடம் விடுவிப்பதற்காக அரசியல் தலைவர்களுடன் பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தை நடத்தி, அவற்றை கண்காணித்த வண்ணம் இருந்தவர்களுள் முக்கியமானவர் இவராவார். மாவை சேனாதிராஜா எதிர் சந்திரிகா பண்டாரநாயக்க வழக்கானது உயர் நீதிமன்றில் உயர் பாதுகாப்பு வலயங்களிலின் சட்ட பூர்வமான தன்மையை கேள்வி எழுப்பியது. உயர் பாதுகாப்பு வலயங்களின் சட்ட பூர்வமான தன்மை முதன் முறையாக கேள்வி எழுப்பிய ஒரு வழக்காகவே இது வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. இதன் பின்னரே பலாலியில் மீள் குடியமர்வுகள் இடம்பெற ஆரம்பித்தன. இதன் விளைவாக மக்களுடைய காணிகளும் பல்வேறு கட்டங்களாக அரசாங்கத்தால் பல சந்தர்ப்பங்களில் விடுவிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் வலி வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்ட அதே சமயத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த சில கோவில்களுக்கும் பக்தர்கள் சென்று வழிபடுவதற்க்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கபட்டன. இது போன்ற வழக்குகளுக்கு தமது ஆதரவினை வழங்கிய ஒரு தலைமைத்துவமே சுமந்திரன் ஆவார். இவ்வாறு வடக்கு கிழக்கில் மக்களது காணிகள் அரசினால் பல்வேறு நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்டு இருந்த போது நீதிமன்றில் அதற்க்கான வழக்குகளை தொடுத்து மக்களுடைய காணிகளை அவர்களுக்கு மீள பெற்றுக்கொடுத்தவர் சுமந்திரன் ஆவார்.
அதே போல உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ மகா ராம விகாரை கட்டப்பட்டது. இது தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட விகாரையாக இருந்தது. இதற்க்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போது அவற்றை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தமது ஆதரவினையும் வழங்கி உள்ளார். அதே போல தொல்பொருளியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்கள் தொடர்பாகவும் பல இடங்களில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
வடக்கு கிழக்கில் போருக்கு பிற்பட்ட காலப்பகுதியில், இராணுவத்தின் இந்த காணிகள் தொடர்பான அபகரிப்புக்களையும் மீறி தமது அரசியல் பொருளாதார இலாப நோக்கங்களுக்காக அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான காணிகள் அரசுடைமையாக்கப்பட்டும், அதனால் ஏற்படுகின்ற எதிர்மறையான தன்மைகளை பொருட்படுத்தாமல் அதற்க்கான அனுமதியையும் அரசாங்கம் வழங்கிய வண்ணமே இருந்தது. இதனால் பலதரப்பட்ட மக்கள் சமூகம் பாதிப்புக்களை எதிர் நோக்கினாலும் அவற்றை பொருட்படுத்தமால் அரசாங்கத்தின் தன்னிச்சையான ஏகாதிபத்திய முடிவுகள் வடக்கு கிழக்கில் தொடர்ந்த வண்ணமே இருந்தது.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அதானி திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு என்பன திகழ்கின்றன. மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களுக்காக மக்களது தனியார் காணிகள் அடாத்தாக கைப்பற்றப்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதிமன்று வரை சென்றவரும் சுமந்திரனே ஆவார். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு ஒரு சட்டத்தரணியாகவும் அரசியல்வாதியாகவும் மக்களின் நலனுக்காக துணை நின்றுள்ளார். மேலும் மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக புல்லருந்தான் கண்டல் மேய்ச்சல் தரை கால்நடை மேய்ச்சலுக்கு வழங்கப்படாமையால் தமது வாழ்வாதாரத்தில் பெரும் சிக்கல்களையும் பின்னடைவுகளையும் சந்தித்தவர்களுக்காக வாதாடிக் கொண்டிருப்பவரும் இவராவார்.
வடக்கில் மாத்திரமல்லாமல் கிழக்கிலும் மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்ட தருவாயில் இந்த மேய்ச்சல் தரையை மீட்டெடுக்க நீதிமன்றுக்கு சென்று அவர்களுக்காக வாதாடி அவர்களுடன் போராட்டங்களில் ஈடுபட்ட மனிதாபிமான தலைவருமாக இவர் இருக்கிறார். இந்த மேய்ச்சல் நிலம் சிங்கள ஆக்கிரமிப்பிற்குள் இருந்த போது எந்தவொரு அரசியல் தலைவர்களாலும் அதற்க்கான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது. மேலும் கால்நடைகள் கொல்லப்பட்டு மக்களது வாழ்வாதாரம் கேள்விக்குரியதாக மாறிய பண்ணையாளர்களுக்கு மக்களின் பிரதிநிதியாக தன்னுடைய கடமையை நிறைவேற்ற சுமந்திரன் ஒரு போதும் பின்வாங்கியதில்லை.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி , திரியாய் போன்ற பகுதிகளில் தமிழ் விவசாயிகளின் பூர்வீக காணிகளில் விவசாயத்தில் ஈடுபட தொல் பொருள் திணைக்களம் தடுப்பதற்கு எதிராக சட்ட ரீதியாக போராடி உள்ளார்.
இவ்வாறு அரசியல் இலாப நோக்கங்களுக்கு அப்பால் சென்று வாழ்வாதார சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க ஒரு வழக்கறிஞராக தனது சட்ட அறிவை பயன்படுத்தி அரசால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்து மக்களுக்காக தனது பயணத்தை மேற்கொண்டுள்ளவராக இவரை நாம் காணலாம்.