பிரச்சனையும் பின்னணியும்:
அரசாங்கம் தமிழ்மக்களின் தனியார் காணிகளை பெருமளவில் உள்ளடக்கியதான உயர் பாதுகாப்பு மண்டலம பிரகடனங்களை செய்வதன் மூலம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு நிலப்பரப்பை ஆக்கிரமித்து வருவது யாவரும் அறிந்ததே.
இவற்றை அவ்வப்போது தொடர்ச்சியாக சாவாலிற்கு உட்படுத்திவருவது மட்டுமன்றி, இடைக்கால தடையுத்தரவை பெறுவதன் மூலம், இனத்தின் இருப்பை உறுதிப்படுத்தும் நிலப்பரப்பை பாதுகாப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கையை இலவசமாக செய்து வருகின்றார்.
சுமந்திரனின் நடவடிக்கை:
2003 இல் அப்போதைய ஜனாதிபதி, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கு எதிராக மாவை சேனாதிராஜா சார்பில் உச்ச நீதிமன்றில் சுமந்திரன் பேசிய வழக்கு இது. இவர் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு 12 வருடங்களுக்கு முன்னராகவே இலவசமாக செய்த வழக்கு அது. (SC FR 646/2003) உயர் பாதுகாப்பு வலயங்களின் பிரகடனத்தின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட முதல் வழக்கு.
விளைவு:
இதன் பலனாக மக்களை மீளக்குடியமர்த்த அனுமதித்து உச்ச நீதிமன்றம் 2007 ல் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து நடந்த செயல்பாட்டின் போது, கிட்டத்தட்ட 50000 பேருக்கு சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்பட்டன.
பயன்:
இதைத் தொடர்ந்து 2012ல் நில உரிமையாளர்களால், வலிகாமத்தில் தங்கள் நிலங்களை பயன்படுத்துவதை தடுத்த வழக்கில் மக்களுக்காக ஆஜரானார் SCFR 609/2012. இன்றும் சுமார் 2,176 மனுதாரர்களால் முன்வைக்கப்பட்ட சில வழக்குகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 2003ஆம் ஆண்டு முதல் உயர் பாதுகாப்பு மண்டலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் 6.138 ஏக்கர் தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை எதிர்த்து 2013ஆம் ஆண்டு இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை மக்களுக்காக இலவசமாக தொடர்ந்து வாதாடிவருவது சுமந்திரன் மட்டுமே.
மக்கள் காணி மீட்க; ஒரு சட்டப் போராளி...
பணிகள் --> காணி மீட்பு
https://vayankal.com/sumanthiranin_panikal/kaanni-miittppu