சுமந்திரனின் பணிகள்:
திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என மேலே விழிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்ததுமல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.
இனப்பிரச்சனை தீர்வுக்கான முன்னெடுப்பு
இணைந்த வடக்கு-கிழக்கில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சி முறைமை நோக்கிய தொடர்சியான முன்னெடுப்புக்கள்.
புதிய அரசியல் அமைப்பு வரைபு
2015 - 2019 வரையான நல்லாட்சி காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான வரைபு. சுமந்திரனது தலைமையில் 2015-2017 வரை வரையப்பட்ட அரசியலமைப்பை தாம் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசானாயக்க அண்மையில் சொல்லியிருப்பது மிக முக்கியமானது. அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த வரைபு தமிழர் மட்டில் முக்கிய விடயங்களான காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் மாகாணங்களிற்குப் பகிர்ந்தளிக்கிறது. இந்த விடயத்தில் பெரும்பான்மைக் கட்சிகளது சம்மதத்தைப் பெற சுமந்திரன் கடுமையாக முயற்சியெடுத்து வெற்றியும் கண்டார்.
மனித உரிமைப்பேரவையும் பொறுப்புக்கூறலும்
தொடர்ச்சியான ஐ.நா மனித உரிமை பேரவைத் தீர்மானங்களூடாக; பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள், இனவழிப்பு மற்றும் போர்க்குற்ற விசாரணை என்பவற்றிற்கான சர்வதேச அழுத்தங்களை, யுத்த வெற்றி மனப்பாங்கில் இருக்கும் அரசின் மீது பிரயோகித்தல். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை அறிவதற்கான கட்டமைப்பை உருவாக்குதல். 2009 இல் இலங்கை அரசை பயங்கரவாதத்தை முறியடித்ததாகப் பாராட்டிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாட்டை ஜெனீவாவில் சுமந்திரன் தன் பாரிய உழைப்பால் மாற்றினார். குறிப்பாக 2012 முதல் 2014 வரை அடுத்தடுத்து அவரது முயற்சியால் நிறைவேற்றப்பட்ட ஜெனீவாத் தீர்மானங்கள் மூலம் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை பதிவு செய்த உறுதியான உத்தியோக பூர்வ சர்வதேச ஆவணத்தை வெளியிட முடிந்தது.
ஊழல் மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு எதிரான தொடர்ச்சியான பல சட்ட நடவடிக்கைகள்
அண்மைய விசா மோசடி, EFP கொடுப்பனவு உட்பட பல ஊழல்களுக்கும்; மீன்பிடி மற்றும் கடல்வளம், மேச்சல்நிலம், பயிர்ச்செய்கை, வியாபாரம் என மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் எதிரான பொதுநல நீதிமன்ற நடவடிக்கைகளூடான தீர்வுகள்.