illustration
illustration
illustration
illustration

காணொலிகள்

  8/11/2024 - வட-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி

03/11/2024 - பாராளுமன்றத் தேர்தல் 2024 | மின்னல்  

27/10/2024 - பூவன் மீடியா - பாகம் 1

27/10/2024 - பூவன் மீடியா - பாகம் 2

27/10/2024 - பூவன் மீடியா - பாகம் 3

27/10/2024 - டான் டீவி - ஸ்பொட் லைட்

26/10/2024 - வீரகேசரி 

கம்பவாருதி ஜெயராஜ், பகிரங்க விமர்சனம்

நடராஜா முரளிதரன், எழுத்தாளர்




வட-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி - ஒரு கலந்துரையாடல் - 8/11/2024

(10.12.2022) “பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழித்துக் கட்டு” என்ற தொனிப்பொருளில் சுமந்திரன்

Facebook காணொலிகள்

The choice before the Tamil people

காலம் மாறும் போது, ஆளும் கட்சி மாறும் போது, எமக்கு முன்னால் வருகின்ற சந்தர்ப்பங்கள் மாறி வரும். இலங்கையில் சமஷ்டி ஆட்சியை உருவாக்கும் எமது இலக்கு மாறாதது. இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அடையும் வழி . . . காலத்தையும், கைகூடும் சந்தர்ப்பங்களையும் பொறுத்து மாறும். நேற்றுத் தமிழரசுக் கட்சியின் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் எம். ஏ. சுமந்திரன் ஆற்றிய யதார்த்த உரை.

Posted by M. A. Sumanthiran on Saturday 2 November 2024

காலம் மாறும் போது, ஆளும் கட்சி மாறும் போது, எமக்கு முன்னால் வருகின்ற சந்தர்ப்பங்கள் மாறி வரும். 
இலங்கையில் சமஷ்டி ஆட்சியை உருவாக்கும் எமது இலக்கு மாறாதது. இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அடையும் வழி . . . காலத்தையும், கைகூடும் சந்தர்ப்பங்களையும் பொறுத்து மாறும். 3/11/2024ல் தமிழரசுக் கட்சியின் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் எம். ஏ. சுமந்திரன் ஆற்றிய யதார்த்த உரை.

ஒரு தேசத்தின் அடிப்படை நிலம்.
தமிழ்த் தேசத்தின் நிலம் மீட்டவர்கள் நாங்கள். அதை மக்கள் அறிவார்கள். 

ஒரு தேசத்தின் அடிப்படை நிலம். தமிழ்த் தேசத்தின் நிலம் மீட்டவர்கள் நாங்கள். அதை மக்கள் அறிவார்கள். எம். ஏ. சுமந்திரன் அறிவார்ந்த தமிழ்த் தேசியத்தின் குரல் வீட்டுக்கு நேரே → ஒன்றிற்கு மேலே 🏠✅ 1️⃣✅

Posted by M. A. Sumanthiran on Tuesday, November 5, 2024

மக்கள் காணி மீட்க; ஒரு சட்டப் போராளி...
அரசாங்கம் தமிழ்மக்களின் தனியார் காணிகளை பெருமளவில் உள்ளடக்கியதான உயர் பாதுகாப்பு மண்டலப் பிரகடனங்களை செய்வதன் மூலம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு நிலப்பரப்பை ஆக்கிரமித்து வருவது ஒரு புதிய நடைமுறை அல்ல. 
அரசாங்கம் குறைந்தது 1990 ஆம் ஆண்டிலிருந்து வடக்கு மற்றும் கிழக்கில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் இத்தகைய சட்டவிரோத எல்லை நிர்ணயம் செய்துவருகின்றது. இவற்றிற்கு எதிராக சுமந்திரன் அவர்களால் அவ்வபோதே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

Posted by M. A. Sumanthiran on Wednesday 30 October 2024

சிவில் சமூகத்தினால் நடாத்தப்படும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பங்குபெறும் மக்கள் மன்றத்தில் சுமந்திரனின் உரை - 9/11/2024

சிவில் சமூகத்தினால் நடாத்தப்படும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பங்குபெறும் மக்கள் மன்றத்தில் சுமந்திரனின் உரை

Posted by M. A. Sumanthiran on Friday, November 8, 2024

அறிவார்ந்த தமிழ்த் தேசியத்தின் குரல்
மீண்டும் எமக்காய் ஒலிக்க
தேர்ந்தெடுப்போம்

அறிவார்ந்த தமிழ்த் தேசியத்தின் குரல் மீண்டும் எமக்காய் ஒலிக்க தேர்ந்தெடுப்போம் . . . எம். ஏ. சுமந்திரன் வீட்டுக்கு நேரே → ஒன்றிற்கு மேலே 🏠✅ 1️⃣✅

Posted by M. A. Sumanthiran on Wednesday, November 6, 2024

பாராளுமன்ற உறுப்பினராக எம். ஏ. சுமந்திரன் ஆற்றிய பணிகளில் 2015-2017 கால ரணில்-மைத்ரி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சியும் முக்கியமானது. 
இந்தக் காணொளியில் அந்த முயற்சி மீதான தனது இன்றைய பார்வையையும், அன்று அந்த முயற்சி பயனளிக்காத போதும் இன்று அந்த முயற்சியின் பிரதிபலன் என்ன என்பதையும் பகிர்கிறார்.

பாராளுமன்றத்தில் சுமந்திரன் செய்ததென்ன?

பாராளுமன்ற உறுப்பினராக எம். ஏ. சுமந்திரன் ஆற்றிய பணிகளில் 2015-2017 கால ரணில்-மைத்ரி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சியும் முக்கியமானது. இந்தக் காணொளியில் அந்த முயற்சி மீதான தனது இன்றைய பார்வையையும், அன்று அந்த முயற்சி பயனளிக்காத போதும் இன்று அந்த முயற்சியின் பிரதிபலன் என்ன என்பதையும் பகிர்கிறார்.

Posted by M. A. Sumanthiran on Saturday 2 November 2024

இலங்கை தமிழரசுக் கட்சி பிளவுபட்டுள்ளதா?"வீடு இன்றும் ஒன்றாக, மற்றவர்களோ நான்கு புறமும் நாலு கட்சிகளாக"

Posted by M. A. Sumanthiran on Thursday 7 November 2024

சிக்கலான கேள்விகளுக்கு சுமந்திரனின் பதில்கள்!
கேள்வி #1: யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் வேட்பாளர் நியமனங்கள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது? நியமனக்குழு சுமந்திரனது குழு என்கிறார்களே? நீங்கள் உங்களுக்கு சாதகமான வேட்பாளர்களை மட்டும் கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறார்களே? 

யாழ் வேட்பாளர் நியமனத்தில் நடந்தது என்ன?

சிக்கலான கேள்விகளுக்கு சுமந்திரனின் பதில்கள்! கேள்வி #1: யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் வேட்பாளர் நியமனங்கள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது? நியமனக்குழு சுமந்திரனது குழு என்கிறார்களே? நீங்கள் உங்களுக்கு சாதகமான வேட்பாளர்களை மட்டும் கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறார்களே? கட்சியின் இன்றைய மத்திய செயற்கு குழு 2019 இல் தெரியப்பட்டது. இந்த மத்திய செயற்குழுவில் மொத்தம் 41 உறுப்பினர்கள். இறுதியாக நடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில், 38 பேர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்தக் கூட்டத்தில் தேர்தல் நியமனக் குழுவை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டது. செயற்குழுக் கூட்ட மேடையில் அமர்ந்திருந்தவர்கள் ஐவர். மாவை சேனாதிராஜா ப. சத்தியலிங்கம் (பொதுச் செயலாளர்) கனகசபாபதி (பொருளாளர்) சி.வி.கே. சிவஞானம் குலநாயகம் (நிர்வாக செயலாளர்) இவர்கள் ஐவரும் புதிய நியமனக் குழுவிற்கு 11 பெயர்களை பிரேரித்தார்கள். அந்த 11 பெயர்களும் மத்திய செயற்குழுவால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தப் 11 இல் நான் ஒருவன். இந்த நியமனக் குழுதான் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் வேட்பாளர் பட்டியலைத் இறுதிப்படுத்தியது. இறுதி வேட்பாளர் பட்டியலில் நான் நியமனம் கொடுக்க வேண்டாமென்று எதிர்த்தவர்களுக்கும் நியமனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் சிபாரிசு செய்தவர்கள் சிலருக்குக் கொடுக்கப்படவில்லை. பலர் விண்ணப்பித்திருந்த நிலையில் 9 பேருக்கு மாத்திரமே நியமனம் வழங்க முடியுமென்ற நிலையில் சில பொதுவான வரையறைகள் தீர்மானிக்கப்பட்டு, அதனடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டது. வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட இறுதி முடிவுகள் அனைத்தும் நியமனக் குழுவினது ஏகமனதான தீர்மானங்கள்; குழுவினது முடிவு கட்சியனது; கட்சியினது முடிவு எனது முடிவு. கட்சியின் முடிவு எல்லோரதும் முடிவாக இருக்க வேண்டும். #மக்களோடுசுமந்திரன் #VoteSuma #தமிழரசு 🏠❌1️⃣❌

Posted by M. A. Sumanthiran on Sunday 3 November 2024

வடக்கையும் கிழக்கையும் நிர்வாக ரீதியாக பிரித்தவர்களுக்கு ஒரு செய்தியாக, இணைந்த வட-கிழக்கின் பிரநிதிகளை ஒரே வீடாக பாராளுமன்றம் அனுப்புவோம். 
- சுமந்திரன் 5 /11/2024

Posted by M. A. Sumanthiran on Monday 4 November 2024

தீபாவளிக்குத் தீர்வு?
தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!  
தமிழரசுக் கட்சி நாட்டில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க தமிழ் மக்களது ஆணையைக் கோரி 2015 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலைச் சந்தித்தது. 

தீபாவளிக்குத் தீர்வு?

*தீபாவளிக்குத் தீர்வு?* தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள்! தமிழரசுக் கட்சி நாட்டில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க தமிழ் மக்களது ஆணையைக் கோரி 2015 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலைச் சந்தித்தது. அதற்கு எம் மக்களும் தம் பலமான ஆணையை வழங்கியிருந்தார்கள். ஆனால் புதிய அரசியலமைப்பொன்றை எம்மால் அந்த ரணில்-மைத்ரி அரசுக் காலத்தில் உருவாக்கி விட முடியவில்லை. “தீபாவளிக்குத் தீர்வு” என்ற மீம்ஸ் மட்டீரியலின் பின்புலம் இது தான். 🙂 ***ரணில்-மைத்ரி அரசாங்கத்தின் அரசியலமைப்பு உருவாக்க முயற்சி மீதான வரலாற்றுக் கண்ணோட்டம்*** தீபாவளித் திருநாளாகிய இன்று ரணில்-மைத்ரி அரசுக் கால அரசியலமைப்பு முயற்சியைச் சற்றுப் பின்னோக்கிப் பார்ப்பது பொருத்தமானது. மார்ச் 09, 2016 ஆம் திகதியன்று பாராளுமன்றத் தீர்மானமொன்றிம் மூலம் பாரளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டது. ஒரு மாதம் கழித்து, ஏப்ரல் 05, 2016 அன்று அரசியலமைப்புச் சபை அதன் முதல் அமர்வில் ஒரு வழிகாட்டல் குழுவை ஏகமனதாக நியமித்தது. அந்த வழிகாட்டல் குழுவில் 21 பேர் நியமிக்கப்பட்டார்கள். அந்தக் குழுவில் நான் அங்கத்தவராக இருந்தேன். இன்றைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் ஒரு அங்கத்தவராக இருந்தார். அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குழுவின் தலைவராகச் செயற்பட்டார். வழிநடத்தல் குழு 12 விடயங்களைக் கண்டறிந்து அவற்றில் 6 விடயங்களை மே 05, 2016 அன்று அரசியலமைப்பு சபையால் நியமிக்கப்பட்ட துணைக் குழுக்களுக்கு ஒதுக்கியது. அவையாவன: மத்தி-மாகாண உறவுகள் நிதி அடிப்படை உரிமைகள் நீதித் துறை பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, பொலிஸ் அதிகாரம் பொதுச் சேவைகள் சீர்திருத்தம் இந்த 6 துணைக் குழுக்களின் அறிக்கைகளும் அத்தோடு வழிகாட்டல் குழுவினால் நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவின் அறிக்கையொன்றும் அரசியலமைப்புச் சபையின் முன்னால் முறையே நவம்பர் 19 மற்றும் டிசம்பர் 10, 2016 ஆகிய தினங்களில் சமர்ப்பிக்கப்பட்டன. மிகுதிச் சிக்கலுக்குரிய 6 விடயங்களான தற்போதைய அரசியலமைப்பின் அத்தியாங்கள் 1 மற்றும் 2 உடன் தொடர்புபட்ட விடயங்களான அரசின் தன்மை ஆட்சி முறை இறையாண்மை மதச் சார்பு தேர்தல்முறை சீர்திருத்தம் அதிகாரப் பகிர்வு மற்றும் காணி தொடர்பான விடயங்கள் தொடர்பில் வழிநடத்தல் குழு தனது இடைக்கால அறிக்கையை செப்டம்பர் 21, 2017 அன்று சமர்ப்பித்தது. 2016 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் வெளி வந்திருக்க வேண்டிய இந்த அறிக்கை, காலம் தாழ்த்தியே அரசியலமைப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இரு பிரதான கட்சிகளும் பங்கெடுத்த தேசிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு உருவாக்க முயற்சி, 2016 இல் வேகமாக முன்னேறிய போதும், பின்னர் பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி மைத்திரிக்கு இடையிலான விரிசல், மற்றும் வழி நடத்தல் குழுவில் இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எடுத்த முரண் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து ஸ்தம்பிதமடையத் தொடங்கியது. எனது தனிப்பட்ட உழைப்பின் பயனாகவே இடைக்கால அறிக்கையை 2017 செப்டம்பர் மாதத்திலாவது வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை அரசியலமைப்புச் சபையில் சமர்ப்பிக்க முடிந்தது. ஏப்ரல் 2016 தொடக்கம் செப்டம்பர் 2017 வரையிலான அரசியலமைப்பு உருவாக்க முயற்சியில், வழி நடத்தல் குழு 73 தடவைகள் சந்தித்துக் கலந்தாலோசனை செய்திருந்தது. இந்த இடைக் கால அறிக்கையின் சாரம் இது தான்: அதிகாரப் பகிர்வு, மத்தி-மாகாண உறவு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் என்பவற்றில் அனைத்துக் கட்சிகளிடையேயும் பரந்துபட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல், ஒற்றையாட்சியா/சமஷ்டியாட்சியா, பௌத்தமதத்திற்கு முன்னுரிமை வழங்குவதா இல்லையா என்ற விடயங்களில் ஜனாதிபதி சிறிசேனவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பத்தில் தான் எடுத்த நிலைப்பாடுகளிலிருந்து முரண்பட்ட முடிவுகளை வெளிப்படுத்தியிருந்தது. மகிந்த ராஜபக்சவின் மொட்டுக் கட்சி தான் இடைக்கால அறிக்கையின் பிரதான கூறுகளை முற்றாக எதிர்த்தது. இன்றைக்கு ஜனாதிபதியாக இருக்கும் அனுரகுமார திசாநாயக்க அறிக்கையின் பிரதான பகுதியின் பிரேரணைகளுக்கு சில பின்னூட்டங்களோடு இணங்கியிருந்தார். ரணில்-மைத்ரி அரசாங்கத்தின் அரசியலமைப்பு உருவாக்க முயற்சியின் முக்கிய இறுதிப் படியாக இந்த சமர்ப்பிப்பின் பின்னர் 2017 ஒக்டோபர் 31 மற்றூம் நவம்பர் 1 ஆகிய திகதிகளில் அரசியலமைப்பு சபையில் நிகழ்ந்த வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தைக் கொள்ளலாம். ***வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்து சுமந்திரன் ஆற்றிய உரை*** இந்த விவாதத்தில் வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்து நான் வராலாற்று முக்கியத்துவமிக்கதோர் உரையை ஆற்றியிருந்தேன். அந்த உரையில் நான் குறிப்பிட்ட விடயங்கள் சில: இதுவே இலங்கையில் ஒரு தமிழ்க் கட்சி நாட்டின் அரசியலமைப்பொன்றிற்கான முன்மொழிவுகளை ஆதரிக்கும் முதற் தருணம். இது வரலாற்று முக்கியத்துவம் நிறைந்ததோர் நிகழ்வு. நாட்டில் வாழும் அனைவருக்கும் சமத்துவத்தைக் கொடுக்க விளையும் ஒரு அரசியலமைப்பு, நிச்சயமாக மதச் சார்பற்றதாகவே இருக்க வேண்டும். இது தமிழர் பிரதிநிதிகளாகன எம் உறுதியான நிலைப்பாடு. இதை நாங்கள் இந்த இடைக்கால அறிக்கையின் 1C என்ற இணைப்பில் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். நான் பௌத்த மதத்தைச் சார்ந்தவன் அல்ல. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் அரசியலமைப்பு என்னை இரண்டாம் தரப் பிரஜையாகவே பார்க்கிறது.மதச் சார்பின்மை சமத்துவத்திற்கான அடிப்படை. ஆனால் இந்த நாட்டின் பௌத்த மதத்தவத்தவர்கள், இல்லை நாங்கள் மட்டுந்தான் முதற் பிரஜைகள் நாமல்லாதோர் இரண்டாம் பிரஜைகள் என்று விடாப்பிடியாக நிற்கும் பட்சத்தில் (எமக்குத் தேவையான அதிகாரப் பகிர்வு முதலிய பிற நன்மைகளை அடையும் பொருட்டு) நாங்கள் மதச் சார்பற்ற அரசியலமைப்புத் தான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கப் போவதில்லை. ஏனைய மதங்களுக்கும் உச்ச பட்ச பாதுக்கப்புக்களையும், உரிமைகளையும் தரும் ஒரு இணக்கப்பாட்டையெட்ட நாங்கள் தயார். ஆனால், இந்த நாட்டின் பௌத்தர்கள் பிற மதப் பிரஜைகளை இரண்டாம் தரப் பிரஜைகளாக்க விளைவது அறமற்ற, நியாயப்படுத்த முடியாத நிலைப்பாடு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் அனைத்து மக்களையும் சமமாக நடத்தாத அரசியலமைப்பை உருவாக்கும் அறமற்ற முடிவைத் தான் எடுக்கப்போகின்றீர்களா என இந்தச் சபையிலிருக்கும் நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இலங்கையின் அரசாட்சி சமஷ்டியாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். தமிழ் மக்கள் நாட்டைப் பிரிப்பதற்காகவே சமஷ்டியைக் கோருவதாக ஒரு பொய்ப் பிரச்சாரம் சிங்கள மக்களிடையே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. ஆனால் இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா தான் இலங்கையில் சமஷ்டி ஆட்சியைக் கோரிய முதற் தலைவர். இவர் 1926 ஆம் ஆண்டு சிலோன் மார்னிங் லீடரென்ற ஆங்கிலச் செய்தித் தாள் ஒன்றில் இலங்கைக்கு ஏன் சமஷ்டியாட்சி முறை அவசியமென விளக்கி ஆறு கடிதங்களை வரைந்திருந்தார். நாட்டின் இடதுசாரிகளும் சுதந்திரத்திற்கு முன்னர் சமஷ்டி ஆட்சிமுறையையே விரும்பியிருந்தார்கள். கண்டியின் பிரதானிகள் டொனமூர் கொமிசன் முன்பாகவும், சோல்பரி கொமிசன் முன்பாகவும் 1930/40 களில் தெளிவாக இணைந்த வட-கிழக்கை ஓர் அலகாகக் கொண்ட, மூன்று தன்னாட்சிப் பிரிவுகளை அடக்கிய சமஷ்டி முறையையே கோரினார்கள். நாங்கள் நாட்டைப் பிரிப்பதற்காக சமஷ்டியைக் கோரவில்லை. மாறாக, நாடு பிளவுபடாதிருக்கவே நாம் நாட்டின் ஆட்சியதிகாரம் இந்த நாட்டின் வேறுபட்ட மக்கள் கூட்டங்களுக்குப் பங்கிடப்பட வேண்டும் என்கிறோம். நான் இந்த நாட்டின் பிரஜையெனப் பெருமிதம் கொள்ள வேண்டுமெனில், எனக்கு இந்த நாட்டின் அரசாட்சியில் சரி நிகர்ப் பங்கு கொடுக்கப்பட வேண்டும். எண்ணிக்கையில் பெரும்பான்மையான சமூகம் எனது அரசியல் அபிலாசைகளை – தமது மக்கள் தொகையை மட்டும் வைத்துக் கொண்டு – தட்டிப் பறிக்கும் நிலை என்னை இரண்டாம் தரப் பிரஜையாகவே வைத்திருக்கும். அரசாட்சியில் சரிநிகர்ப் பங்கு வழங்கப்படாத பட்சத்தில் நான் என்னை இலங்கையன் என்றழைக்க முடியாது. இதனாற் தான் எனது மக்களில் பலர் இன்று புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் இன்றும் கூடத் தங்களை கனேடியத் தமிழர் என்றோ, அவுஸ்திரேலியத் தமிழரென்றோ தான் அடையாளப்படுத்துகிறார்கள். இலங்கையரென்று அவர்கள் சொல்வதில்லை. ஏன்? அவர்களுக்குரித்தான அரசாட்சிப் பங்கு அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் வன்முறை கொண்டு விரட்டப்பட்டார்கள். தமிழரசுக் கட்சி இந்தளவிற்கு இறங்கி இந்த அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஈடுபடுவதற்குக் காரணம் நாட்டின் இந்த இழி நிலை மாற வேண்டும் என்ற வேட்கைதான். எமது மொழிக்கு இந்த நாட்டில் சமவுரிமை கொடுக்கப்பட வேண்டும். எமது மதங்களுக்கும் இந்த நாடு முதலிடம் கொடுக்க வேண்டும். அரசாட்சியில் எமக்குரித்துடைய பங்கு எமக்காக வேண்டும். ஒருமைப்பாட்டை இந்தச் சபையில் எட்டவென நாம் செய்யும் விட்டுக்கொடுப்புக்கள் சிலவற்றின் பால் எம் மக்களிடம் எதிர்ப்பிருக்கின்றது. ஆனால் நாங்கள் எமது மக்களது அடிப்படை அபிலாசைகளைப் பூர்த்தி செய்யம் அரசியலமைப்பை உருவாக்க அந்த எதிர்ப்பையும் தாண்டிச் சிரத்தையுடன் உழைக்கிறோஂம். அப்படியானதொரு தீர்வில் இணக்கப்பாடு வரும் போது, நாம் எம் மக்கள் முன்பு போய், மக்களிடம் இந்தத் தீர்வினை ஆதரிக்கும் படி கோருவோம். எம் மக்கள் நிதானமானவர்கள், யதார்த்தம் புரிந்தவர்கள். அவர்கள் அப்படிப்பட்ட தீர்வொன்றை நிச்சயம் ஆதரிப்பார்கள். இந்த நாடு இது வரை சந்தித்த ஆகப் பெரிய பிரச்சினையென்ன? மூன்று தசாப்த கால யுத்தத்தை இந்த நாடு எதன் பேரில் சந்தித்தது? இந்தத் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர, பொருத்தமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதை விடப் பெரிய கடன் ஒன்று எம் எவர்க்கு முன்பாகவும் இருக்கிறதா? இதற்காகத் தான் நான் இன்று இந்தச் சபையிலிருக்கும் உங்கள் அனைவரையும் இந்த நாட்டின் முன்னிருக்கும் ஆகப் பெரிய பிரச்சினையை, நாட்டின் அனைத்து மக்களதும் சமத்துவத்தையும், மாண்பையும், உறுதிப்படுத்தும் அரசியலமைப்பொன்றினூடாகத் தீர்த்து வைக்கவென தாழ்மையுடன் அழைக்கிறேன். இந்த நாட்டில் வெவ்வேறு மொழிகளைப் பேசும், பல்வேறு மதங்களைப் பின்பற்றும், வேறுபட்ட பிரதேசங்களில் வாழும் அனைத்து மக்களும் நாம் இலங்கையர் என்று சொல்லும் நிலை உருவாக வேண்டுமென்றால், அனைத்து மக்களும் தமது உரிமைகளும், மனித மாண்பும், சமத்துவமும், அரசாட்சி அதிகாரமும் இந்த நாட்டின் அரசியலமைப்பின் மூலம் காக்கப்பட்டிருக்கிறது என உணர வேண்டும். இந்த நாட்டின் அரசியலமைப்பு, தமது அரசியலமைப்பு என்றவர் கொள்ளவேண்டும். இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட பின்னர் அடுத்த சில நாட்களுக்கு அரசியலமைப்புச் சபையிலே இதன் மேலான விவாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து பெரிதளவில் இந்த விடயம் முன்னேறவில்லை. மைத்திரி-ரணில் இருவருக்கிடையிலான விரிசல் வளர்ந்தது. பின்னர் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், கோட்டாபய ஆட்சி என்று காலம் புரண்டோடி விட்டது. தீர்வு ஒன்று பிறக்கவில்லை. **தமிழருக்கான அரசியற் தீர்வின் அடுத்த படி** மேற் கூறிய விடயங்கள் எமக்கு சில பாடங்களைச் சொல்லி நிற்கின்றது. தெற்கில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கமும், கணிசமான தெற்கு வாழ் மக்களும் இணங்காத தீர்வொன்று சாத்தியப்படப் போவதேயில்லை. இதை நான் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறேன். தீர்வு குறித்து நான் சொன்ன யதார்த வழிப் பாதையில் என்னாலான உழைப்பை நான் செய்தேன். எமது நடவடிக்கைகளில் குறை கண்டவர்கள், எம்மைக் கடுமையாக விமர்சித்தவர்கள் தாங்கள் தீர்வு குறித்துச் சொன்ன கனவு வழிப் பாதையில் எதையாவது அடைந்திருக்கிறார்களா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, 2020 பொதுத் தேர்தலில் என்ன சொல்லி வாக்குக் கேட்டார்கள்? தாங்கள் பாராளுமன்றத்திற்குச் சென்றால், இறுதிப் போரில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் மீதான சர்வதேச குற்றவியல் விசாரணைப் பொறிமுறையை உருவாக்கி, ராஜபக்சக்களை மின்சாரக் கதிரையேற்றி, அதன் நிமித்தம் சிங்கள தேசத்தை அதிரப்பண்ணி, ஒருநாடு-இருதேசம் பிடிப்போம் என்றார்கள். பாராளுமன்றம் சென்றார்கள். என்னத்தைச் சாதித்தார்கள். எதையும் சாதிக்காவிட்டாலும் பிழையில்லை. இவர்கள் சொன்ன வழியில் தீர்வு நோக்கிப் பயணிக்க ஒரு ஆக்கபூர்வமான அடியையாவது எடுத்து வைத்தார்களா? ஒரு துளி முயற்சியேனும் இவர்கள் கடந்த ஐந்து வருடத்தில் எடுக்கவில்லை. இன்று தமது கனவுக் கட்டுக் கதைகளையெல்லாம் மறந்து எதிர்ப்பரசியலைக் காட்ட மாத்திரம் தமக்கு பத்து ஆசனங்கள் வேண்டுமென்று கதையளக்கிறார்கள். ரணில்-மைத்ரி அரசுக் காலத்தில் நான் எடுத்த முயற்சிகள் அன்று பயனளிக்கவில்லை. ஆனால் எனது முயற்சிக்குக் குறையிருக்கவில்லை. இன்று அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் அரசாங்கத்திலிருக்கும் தேசிய மக்கள் கட்சியோடு நான் இந்த அரசியலமைப்பு முயற்சியில் நெருக்கமாகப் பணியாற்றியிருந்தேன். அந்தக் கட்சி அன்றைய வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையைப் பற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அன்றைய என் உழைப்பின் பயனே இன்றைய இந்தப் பேறு. இது நடக்குமா, நடக்காதா . . . அடுத்த தீபாவளிக்குத் தீர்வு வருமா, வராதா . . . எனக் கிளிச்சோதிடம் பார்க்கும் நிலையில் தமிழர் நாமில்லை என்பது எனது நிலைப்பாடு. விடிவு இன்றில்லாவிடினும், நாளை வரும் என்ற நன் நம்பிக்கையோடு, நான் உழைத்துக் கொண்டேயிருப்பேன். வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்து நான் ஆற்றிய உரையில் “இந்தத் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர, பொருத்தமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதை விடப் பெரிய கடன் ஒன்று எம் எவர்க்கு முன்பாகவும் இருக்கிறதா?” எனக் கேட்டிருந்தேன். நிச்சயமாக இல்லை. சாத்தியமான வழிகளில் தமிழருக்கான நிரந்தர அரசியற் தீர்வை அடைய முனைவதே என் முன்னிருக்கும் பெரும் பணி. அன்புடன் உங்கள், எம். ஏ. சுமந்திரன் 🏠❌1️⃣❌

Posted by M. A. Sumanthiran on Thursday 31 October 2024

அடுத்த வெளிவிவகார அமைச்சர் யார்? உதய கம்மன்பிலக்கு தெரிகிறது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் விமர்சனங்கள் பற்றியும் எதிர்காலம் பற்றியும் ஒரு கலந்துரையாடல் - 10/11/2024

சுமந்திரனுடன் சில நிமிடங்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் விமர்சனங்கள் பற்றியும் எதிர்காலம் பற்றியும் ஒரு கலந்துரையாடல்

Posted by M. A. Sumanthiran on Saturday, November 9, 2024

சுமந்திரனின் பணிகள்:

திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என்கின்ற ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்ததுமல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.