illustration
illustration
illustration
illustration

சலசலப்புக்கள்

கம்பவாரதி இலங்கை ஜெயராஜின் உள்ளத்திலிருந்து.....

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து -சொல்வன்மை

 பொருள்: தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல வேண்டும்.

  • ஏன் கடுமையான விமர்சனங்கள்?

    போருக்கு பின்னான இலங்கை அரசியலில்; தமிழ்த்தேசிய விடயங்களுக்காக மட்டுமல்லாது, நாட்டின் பல சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துவருவதால், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாவது இயல்பான ஒன்றே! ஆயினும் சமூகதளங்கலில் பகிரப்படும் பல விமர்சனங்கள் உண்மைக்கு புறம்பானவையும் திரிவுபடுத்தப்பட்டவையுமே. மேலும் அறிய....

  • அரசியலில் தேடிய சொத்து விபரம் என்ன?

    சுமந்திரன் ஒரு ஆற்றல் மிக்க சட்டத்தரனியாவார். வரலாற்று முக்கியமான பல வர்த்தக வழக்குகளை இவர் தன்னுடைய அரசியல் ஈடுபாட்டுக்கு முன்னான காலப்பகுதியில் வாதாடி வெற்றியும் பெற்றார். தற்போதும் தொழில் ரீதியாக சட்டத்தரனியாக பணிபுரிகின்றார். தனது சொத்து விபர்ங்களை வெளியிட்ட ஒரிரு பாராளுமன்ற உறுப்பினர்களுள் சுமந்திரனும் ஒருவர். மேலும் அறிய....

  • சுமந்திரனின் அரசியல் வாரிசு யார்? 

    இவருடைய பிள்ளைகள் மூவரும் தமக்கென்று தனித்துவமான அடையாளத்துடன் வெவ்வேறு துறைகளில் கல்விகற்று வாழ்ந்து வருகின்றனர். குடும்ப அரசியலோ அல்லது அரசியல் அடையாளமோ இல்லாமல் சாதாரண வாழ்க்கையை நடாத்தும் இவர்களை நம்மில் பலருக்கு யார் என்றே தெரியாது. மேலும் அறிய...

  • தனது ஆற்றலையும் வளங்களையும் எவ்வாறு பயன்படுத்துகின்றார்? 

    சட்டதுறையில் தனக்குள்ள புலமையையும் அனுபவத்தையும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பல பொதுநல வழக்குகளிலும், அநீதிக்கெதிராக தனிநபர் சார் வழ்க்குகளிலும் இலவசமாக பயன்படுத்தி வருகின்றார். இரு வேறு தரப்பினருக்கு இடையிலான பிணக்குகளை சுமூகமாகவும் நீதியாகவும் தீர்ப்பதற்காக பல மணிநேரங்களை சமூகப்பொறுப்புடன் செலவிடுகின்றார். மேலும் அறிய...

  • சுமந்திரனுக்கு ஏன் STF பாதுகாப்பு வழங்கப்பட்டது? 

    நல்லாட்சி காலத்தில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழன் ஒருவரால் பணம் கொடுத்து முன்னாள் போராளிகள் சிலரை சுமந்திரனை கொள்வதற்கு கூலிக்கு அமர்த்தப்பட்டது உண்மை. ஆயினும் தெய்வாதீனமாக சுமந்திரன் உயிர் தப்பினார். பின்னர் இம் முன்னால் போராளிகளில் சிலர் ஒப்புதல் வாக்கு மூலமும் வழங்கியுள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் உண்டு. 
    S T F பாதுகாப்பை வைத்துக்கொண்டு அரசுக்கு எதிரான போராட்டங்களை (p2p) முன்னெடுக்கின்றார் என்று கோட்டாபயவின் காலத்தில் சரத் வீரசேகர மேற்கொள்ளப்பட்ட ஆட்சேபனையை தொடர்ந்து அது நீக்கப்பட்டது. இந்த STF ஏற்பாடுகளை சுமந்திரன் கேட்டு பெற்றுக் கொள்ளவும் இல்லை.. அதை நீக்கும் பொழுது நீக்க வேண்டாம் என்றும் கூறவுமில்லை.. 
    சுமந்திரனை கொல்வதற்கு பணம் கொடுத்து ஆள் அனுப்பிவினமாம்.. அதற்கு பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பு பிரிவு கொடுத்தால் அதையும் அவருக்கு எதிராகவே அரசியலில் பயன்படுத்துவார்களாம். 
    இதை என்னவென்று சொல்லுவது?? மேலும் அறிய...

  • சர்வதேச விசாரணை என்ன முடிந்து விட்டதா? 

    இதுதான் நடந்தது என்கின்ற தெளிவான விளக்கத்தையும், இதுதான் நடந்துகொண்டிருக்கிறது என்கின்ற யதார்த்தத்தையும், எவ்வித அடிப்படையற்ற விமர்சனங்களுக்கும் அஞ்சாமல், மிகைக்கூற்றுகள் இல்லாமல், செயல்வலுவற்ற உணர்ச்சியை தூண்டாமல், தொடர்ச்சியாக கூறிவரும் ஒரே ஒரு தமிழ் தேசிய அரசியல்வாதி சுமந்திரன் மட்டுமே! 
    இந்த சட்டரீதியான அணுகுமுறையில் (legitimate process) இல் தவறு இருக்கிறது என்கிறவர்கள் அதை நிவர்த்திப்பது தொடர்பில் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என்று தான் கேட்கவேண்டி இருக்கிறது. 
    காத்திருப்போம் தானாக நடக்கும் பனம்பழம் விழும் என்று சொன்னதைத் தவிர நிச்சயமாக எதுவும் செய்திருக்க வாய்ப்பில்லை! ஏன் நடந்த உண்மையைச்சொல்லக் கூட இங்கு பெரும்பாலான தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு திராணி இல்லை.
    இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை பதிவு செய்த உறுதியான உத்தியோக பூர்வ சர்வதேச ஆவணத்தை வெளியீடு. மேலும் அறிய...

  • தமிழரசின் வேட்பாளர் பட்டியலில் சுமந்திரனின் ஆட்கள் எத்தனை? 

    கட்சியின் இன்றைய மத்திய செயற்கு குழு 2019 இல் தெரியப்பட்டது. இந்த மத்திய செயற்குழுவில் மொத்தம் 41 உறுப்பினர்கள். இறுதியாக நடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில், 38 பேர், யாவரும் கலந்து கொண்டிருந்தார்கள் (மூவர் இறந்து விட்டனர்). . இந்தக் கூட்டத்தில் தேர்தல் நியமனக் குழுவை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டது.
    செயற்குழுக் கூட்ட மேடையில் அமர்ந்திருந்தவர்கள் ஐவர்; மாவை சேனாதிராஜா, ப. சத்தியலிங்கம் (பொதுச் செயலாளர்), கனகசபாபதி (பொருளாளர்), சி.வி.கே. சிவஞானம் மற்றும் குலநாயகம் (நிர்வாக செயலாளர்).
    இவர்கள் ஐவரும் புதிய நியமனக் குழுவிற்கு 11 பெயர்களை பிரேரித்தார்கள். அந்த 11 பெயர்களும் மத்திய செயற்குழுவால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தப் 11 இல் சிறிதரனும் சுமந்திரனும் உள்ளடக்கம்.
    இந்த நியமனக் குழுதான் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் வேட்பாளர் பட்டியலைத் இறுதிப்படுத்தியது. இறுதி வேட்பாளர் பட்டியலில் சுமந்திரன் கட்சிவிதிகளை மீறியவர்களுக்கு நியமனம் கொடுக்க வேண்டாமென்று எதிர்த்தவர்களுக்கும் நியமனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சுமந்திரன் சிபாரிசு செய்தவர்கள் சிலருக்குக் கொடுக்கப்படவில்லை.
    பலர் விண்ணப்பித்திருந்த நிலையில் 9 பேருக்கு மாத்திரமே நியமனம் வழங்க முடியுமென்ற நிலையில் சில பொதுவான வரையறைகள் தீர்மானிக்கப்பட்டு, அதனடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டது.
    வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட இறுதி முடிவுகள் அனைத்தும் நியமனக் குழுவினது ஏகமனதான தீர்மானங்கள்; குழுவினது முடிவு கட்சியனது; கட்சியினது முடிவு எனது முடிவு. கட்சியின் முடிவு எல்லோரதும் முடிவாக இருக்க வேண்டும்.
    கூட்டங்களில் முடிவெடுக்கும் போது தங்களுடைய கருத்தை சொல்லாமல், வெளியே வந்து புலம்புவர்கள் இக்கூடங்களில் பங்குபற்றுவதன் நோக்கம் என்ன? மேலும் அறிய..

  • அமைச்சர் ஆகின்றார் சுமந்திரன்? உதய கம்பன்பிலவிற்கு தெரிகிறது!

    அமைச்சர் ஆகின்றாரா சுமந்திரன்? ஏன் ஜே.வி.பி அரசின் வெளிவிவகார அமைச்சர் சுமந்திரன் தான் என அண்மையில் கம்பன்பில சொன்ன கருத்தை வைத்து, பல கற்பனை கதைகளை பரவலாக காணக்கூடியதாக உள்ளது. இக்கட்டுக் கதைகள், கம்பன்பில சொன்ன கருதின் ஒருபகுதி இல்லாமலே பரப்பப்படுகின்றது. அது இதற்கு சுமந்திரன் வைத்த நிபந்தனைகள் என்னவென்றால்?? 
    1. 2015-2019ல் மேற்கொள்ளப்பட்ட அரசியல் அமைப்பு வரைபின் படி அதிகார பகிர்வும் சமஷ்டி ஆட்சிமுறையும் வழங்கப்பட வேண்டும்.2. ஐ.நா. அறிக்கைப்படி இலங்கையில் இடம் பெற்ற போர்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசரிக்கவேண்டும்.
    அதை அநுர ஏற்றுக்கொண்டாராம்..!!
    இதை கம்பன்பில தெற்கின் அநுரவின் வாக்குகளை குறைக்கும் நோக்கத்துடன் சொன்னார்.. வடக்கில் அதை சுமந்திரனுக்கு எதிராக திர்வுபடுத்தி தாக்குகின்றார்கள்? கம்பன்பிலவிற்கு தெரிகிறது..இங்க பலருக்கு விளங்கவில்லைப் போலும்...மேலும் அறிய..

  • இலங்கை தமிழரசுக் கட்சி பிளவுபட்டுள்ளதா?

    இலங்கை தமிழரசு கட்சி அல்லது கூட்டமைப்பின் பிரிவைப் பற்றி கதைப்பவர்களுக்கு. ‘கொள்கையினால் பிரிந்தோம்’ என்பது எல்லாம் மக்கள் தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் சுத்தும் "பூ"...ஜனநாயக கட்சிக்குள் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் மத்தியில் கட்சியாக இணைந்து, பொதுவான நோக்கத்துக்காக, சேர்ந்து செய்யப்படுவது என்பது; இவர்களுக்கு இயலாத காரியம். பிரிந்தவர்கள் இன்னும் பிரிந்த வண்ணமே உள்ளனர். வீட்டின் தூண்கள் என்றும் உறுதியாகவே உள்ளது.மேலும் அறிய..

சுமந்திரனின் பணிகள்:

திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என்கின்ற ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்ததுமல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.