illustration
illustration
illustration
illustration

சர்வதேச போர்க்குற்ற விசாரணை!

இதுதான் நடந்தது என்கின்ற தெளிவான விளக்கத்தையும், இதுதான் நடந்துகொண்டிருக்கிறது என்கின்ற யதார்த்தத்தையும், எவ்வித அடிப்படையற்ற விமர்சனங்களுக்கும் அஞ்சாமல், மிகைக்கூற்றுகள் இல்லாமல், செயல்வலுவற்ற உணர்ச்சியை தூண்டாமல், தொடர்ச்சியாக கூறிவரும் ஒரே ஒரு தமிழ் தேசிய அரசியல்வாதி; சுமந்திரன் மட்டுமே!

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை பதிவு செய்த உறுதியான உத்தியோக பூர்வ சர்வதேச ஆவணத்தை, 2015 செப்டெம்பர் 16ல் மனிதவுரிமை பேரவை வெளியிட்டது.

இந்த சட்டரீதியான அணுகுமுறையில் (legitimate process) இல் தவறு இருக்கிறது என்கிறவர்கள் அதை நிவர்த்தி செய்வது தொடர்பில் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என்று தான் கேட்கவேண்டி இருக்கிறது.
காத்திருப்போம் தானாக நடக்கும் பனம்பழம் விழும் என்று சொன்னதைத் தவிர நிச்சயமாக எதுவும் செய்திருக்க வாய்ப்பில்லை! ஏன் நடந்த உண்மையைச்சொல்லக் கூட இங்கு பெரும்பாலான தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு திராணி இல்லை

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை பதிவு செய்த உறுதியான உத்தியோகபூர்வ சர்வதேச ஆவணத்தை (OISL 2015 Report), 2015 செப்டெம்பர் 16ல் - மனிதவுரிமை பேரவை வெளியிட்டது. (PDF) இது 251 பக்கங்களை கொண்ட ஒரு ஆவணமாகும்.

Illustration


சர்வதேச விசாரணை தொடர்பான இன்றைய நிலைமை;


கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பாலஸ்தீன-இஸ்ரேல் இடையிலான யுத்தத்தில், 42 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா கூறுகிறது. இஸ்ரேல் வைத்தியசாலை, முகாம்கள், பாடசாலை என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் குண்டுகளை இன்னமும் வீசுகிற வண்ணமே உள்ளது. 
எத்தனையோ ஐநா பாதுகாப்பு சபை தீர்மானங்கள், இனப்படுகொலை தீர்மானங்கள், பல்வேறு நாடுகளின் பயனத்தடை, பொருளாதாரத்தடை எல்லாவற்றையும் தாண்டி யுத்தம் நிறுத்தப்பட முடியாமல் இன்றும் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது. 
ஈழத்தின் இறுதி யுத்தத்தின் போது இல்லாதிருந்த, வெகுசன ஊடகங்களின் உற்று நோக்குகையும், சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஆதாரங்களும் காணப்படுகின்ற இந்த சூழலிலேயே இதுதான் நிலைமை என்றால்; இன்றைக்கு 15 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்று முடிந்த யுத்தத்தின் மனித உரிமை மீறல்களை, யுத்த குற்றங்களை, இனப்படுகொலையை நிரூபித்து, அதற்கான சர்வதேச நீதியை பெறுவதில் உள்ள சிக்கல் தன்மையை சிந்தித்துப் பாருங்கள்! 
இஸ்ரேல் போலவே இலங்கையும் உரோம் உடன்பாட்டில் கைச்சாத்து இடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணை தொடர்பான இரு வெவ்வேறு விளக்கங்கள்

சுமந்திரன் ஒரு குடிமகனின் உண்ர்ச்சிபூர்வமான கேள்விக்கு பதில் கூறும் போது,

சுமந்திரனும் process உம்.

இதுதான் நடந்தது என்கின்ற தெளிவான விளக்கத்தையும்- இதுதான் நடந்துகொண்டிருக்கிறது என்கின்ற யதார்த்தத்தையும், எவ்வித அடிப்படையற்ற விமர்சனங்களுக்கும் அஞ்சாமல், மிகைக்கூற்றுகள் இல்லாமல்- செயல்வலுவற்ற உணர்ச்சியை தூண்டாமல், தொடர்ச்சியாக கூறிவரும் ஒரே ஒரு தமிழ் தேசிய அரசியல்வாதி சுமந்திரன் மட்டுமே! இந்த legitimate process இல் தவறு இருக்கிறது என்கிறவர்கள் அதை நிவர்த்திப்பது தொடர்பில் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என்று தான் கேட்கவேண்டி இருக்கிறது. காத்திருப்போம்- தானாக நடக்கும் பனம்பழம் விழும் என்று சொன்னதைத் தவிர நிச்சயமாக எதுவும் செய்திருக்க வாய்ப்பில்லை! ஏன் நடந்த உண்மையைச்சொல்லக் கூட இங்கு பெரும்பாலான தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு திராணி இல்லை.

Posted by Mynthan Shiva on Thursday 31 October 2024

கஜேந்திரகுமார் பூவன் மீடியாவின் 2020 தேர்தலிற்கு முன்னான நேர்காணலில் சொல்லியது, பின்னர் அண்மையில் 2024ல் சொல்லுவது..

கஜா அண்ணை போன முறை தேர்தல்ல அறுத்து உறுத்து சொல்லேக்க நான் கூட லைட்டா நம்பினன், எப்பிடியும் மகிந்தா மாமாவை எலெக்ரிக் சியார்ல ஏத்தி ஈழம் பிடிப்பார் எண்டு. இப்ப விளங்குது. அவர் பார்லிமண்ட் சீற்றெடுக்க சும்மா பம்மாத்துக்க்கு உருட்டி விட்டிருக்கிறார். 😛

Posted by Elijah Hoole on Friday 1 November 2024

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, 2020 பொதுத் தேர்தலில் என்ன சொல்லி வாக்குக் கேட்டார்கள்? தாங்கள் பாராளுமன்றத்திற்குச் சென்றால், இறுதிப் போரில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் மீதான சர்வதேச குற்றவியல் விசாரணைப் பொறிமுறையை உருவாக்கி, ராஜபக்சக்களை மின்சாரக் கதிரையேற்றி, அதன் நிமித்தம் சிங்கள தேசத்தை அதிரப்பண்ணி, ஒருநாடு-இருதேசம் பிடிப்போம் என்றார்கள். பாராளுமன்றம் சென்றார்கள். என்னத்தைச் சாதித்தார்கள். எதையும் சாதிக்காவிட்டாலும் பிழையில்லை. 
இவர்கள் சொன்ன வழியில் தீர்வு நோக்கிப் பயணிக்க ஒரு ஆக்கபூர்வமான அடியையாவது எடுத்து வைத்தார்களா? ஒரு துளி முயற்சியேனும் இவர்கள் கடந்த ஐந்து வருடத்தில் எடுக்கவில்லை. இன்று தமது கனவுக் கட்டுக் கதைகளையெல்லாம் மறந்து எதிர்ப்பரசியலைக் காட்ட மாத்திரம் தமக்கு பத்து ஆசனங்கள் வேண்டுமென்று கதையளக்கிறார்கள்.