சுமந்திரனின் அரசியல் மற்றும் சமூகப் பணிகள்:

ஆரம்பத்தில் தமிழ்த்தேசியம் மற்றும் கட்சி சார்ந்த வழக்குகள் தொடர்பாகவும், அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக திறைமறைவில் செயற்ப்பட்ட இவர், 2010 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை (TNA) பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கை நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். பின்னர் 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்ப்பட்டு வந்தார்.
திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என விழிக்கப்பட்டும் ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்ததுமல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.
இவர் அன்றும் இன்றும் பல பொதுநல வழக்குகளை மக்களுக்காக இலவசமாக பேசி வருகின்றார்.

Illustration
p2p - பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம்
கருத்தாடலுக்கு

p2p - பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம்

DescriptionDetails & specsAttachments
கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் அரகலய போராட்டத்தின் மூலம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது. ஆனால் அந்த அரகலயவிற்கு முன்னோடியான ஒரு மக்கள் போராட்டம் இருக்கிறது.

கோத்தாபயவின் கொடுங்கோல் அரசுக்கு எதிராகச் செய்யப்பட்ட முதலாவது பெருந்திரள் மக்கட் புரட்சி உண்மையில் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் மற்றும் சாணக்கியனால் திட்டமிடப்பட்டு 2021 பெப்ரவரி மாதம் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில்-முதல்-பொலிகண்டி வரையிலான போராட்டமாகும்.

இந்தப் போராட்டம் வட-கிழக்கில் தொடரும் இராணுவ மயமாக்கல், வட-கிழக்கில் தொடரும் பௌத்த மதத் திணிப்பு மற்றும் சனத்தொகை மாற்றம், முஸ்லிம் ஜனசாக்களை வலிந்து எரித்தல், மலையக மக்களது நாட் கூலி, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், அரசியற் தீர்வு என்பன அடங்கலாக பத்து பிரதான விடயங்களை அடிப்படையாக வைத்து இலங்கையெங்கும் வாழும் தழிம் பேசும் சமூகங்கள் அனைத்தினதும் நல்லாதரவைப் பெற்றுக் கொண்டது. வலிமையான கோத்தாபய அரசாங்கத்தின் அடக்கு முறைகளைக் கண்டு தமிழ் பேசும் சமூகம் பயந்து விடவில்லை என்ற செய்தியை உலகறியப் பண்ணியது.

இந்தப் போராட்டத்தை அடக்கவென கோத்தாபய அரசாங்கம் பல்வேறு வழிகளில் முயன்ற போதும், சோராது முன்னின்று தலைமை தாங்கியவர் சுமந்திரன். பல தடைகளை உடைத்துப் போராட்டம் வட மாகாணத்தை எட்டிய பிறகு தான் தம்மைத் தீவிர தமிழ்த் தேசியப் பற்றாளர்களாக அடையாளம் காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள் போராட்டத்தில் தாங்களும் ஒட்டிக் கொண்டார்கள். சுமந்திரனோ, போராட்டத்தின் முதல் நாள் விடிந்த போது பொத்துவில்லில் கொட்டும் மழைதனில் மக்கள் தலைவனாய் நின்றிருந்தார். இறுதி நாட் போராட்டம் பொலிகண்டியில் முற்றிய போதும் அவர் மக்களோடேயே இருந்தார்.

படம் 1: பொத்துவில்-பொலிகண்டிப் போராட்டம் | காலம்: முதலாம் நாள் | இடம்: பொத்துவில்
படம் 5: பொத்துவில்-பொலிகண்டிப் போராட்டம் | காலம்: இறுதி நாள் | இடம்: பொலிகண்டி
#மக்களோடுசுமந்திரன்
#VoteSuma
🏠❌1️⃣❌