பிரச்சனையும் பின்னணியும்:
இலங்கை சட்ட கல்லூரிக்கான தெரிவு பின்வரும் விடயங்களை பொருத்தே தீர்மானிக்கப்பட்டு வந்தது. அனுமதி பரீட்சையில் பெறும் புள்ளிகள், தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கை மட்டுமல்லாது இவ்விரண்டிலும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஒரு நேர்முக பரீட்சை எனும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. இலங்கை சட்ட கல்லூரி அனுமதிக்காக பல மாணவர்கள் தயார்படுதல் வகுப்புக்கள் முதற்கொண்டு பல முயற்சிகளை மேற்க்கொண்டு வருடம் ஒரு முறை நடைபெறும் போட்டிப் பரீட்சைக்கு தோற்றுவர்.
2005 ஒக்டோபரில் இடம் பெற்ற அனுமதி பரீட்சையில், தமிழ்மொழி வினாத்தாளில் காணப்பட்ட குழப்பம் காரணமாக, ஒரே ஒரு மாணவனே தெரிவு புள்ளியிற்கு மேலாக பெற்றிருந்தார்.
சுமந்திரனின் நடவடிக்கை:
தமிழ் மாணவர்களுக்காக உச்சமன்றில் தோன்றிய சுமந்திரன், பரீட்சைகள் தினைக்களம் மீள் பரீட்சை நடாத்த வேண்டடும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
பின்னர், பரீட்சைகள் தினைக்களம் இதற்கு முன்வராதவிடத்து, ஒரு மேலதிக நேர்முக பரீட்சை மூலம் 11 தமிழ் மொழிமூல மாணவர்கள், 3ஆம் பிரதிவாதியான சட்ட கல்லூரி அதிபரினால், தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்வாங்க பட்டனர். இதை எதிர்த்தே ஒரு சிங்கள மொழிமூல தேர்வில் 66 புள்ளி பெற்ற மாணவி (சிங்கள மொழிமூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 69) வழக்கை தொடர்தார்.
அவர் தமிழ் மொழிமூல அனுமதி பரீட்சையில் பெறவேண்டிய புள்ளிகளை, மேலதிக நேர்முக பரீட்சை மூலம் வழங்கமுடியாது என வாதிட்டர். சட்டக் கல்லூரிக்கான மொத்த மாணவர் அனுமதியில் தன்னை உள்ளடக்கவும் வேண்டினார்.
விளைவு:
சுமந்திரன் தமிழ்மொழி வினாத்தாளில் காணப்பட்ட குழப்பம், தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு என்பனவற்றை ஆதாரமாக கொண்டு, தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான கோட்டாவில் சிங்கள மொழிமூல மாணவர்கள் உள்வாங்கப்பட முடியாது என்கிற உச்சமன்ற தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார்.
பயன்:
இதன் மூலம் அந்த 11 தமிழ் மொழிமூல மாணவர்கள் 2006 ற்கான சட்டக் கல்வியை தொடர்ந்தனர். இவ்வாறு சட்டக் கல்வி கவுன்சில் ஏற்றுக்கொண்ட பாரபட்சமான கொள்கையின் விளைவாக இலங்கை சட்டக் கல்லூரியில் நுழைவதற்கு மறுக்கப்பட்ட பல தமிழ் மாணவர்களுக்காக தோன்றி, அவர்களுக்கான நுழைவாயில்களைப் பெற்றுக்கொடுத்தார்.