சுமந்திரனின் அரசியல் மற்றும் சமூகப் பணிகள்:

ஆரம்பத்தில் தமிழ்த்தேசியம் மற்றும் கட்சி சார்ந்த வழக்குகள் தொடர்பாகவும், அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக திறைமறைவில் செயற்ப்பட்ட இவர், 2010 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை (TNA) பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கை நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். பின்னர் 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்ப்பட்டு வந்தார்.
திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என விழிக்கப்பட்டும் ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்ததுமல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.
இவர் அன்றும் இன்றும் பல பொதுநல வழக்குகளை மக்களுக்காக இலவசமாக பேசி வருகின்றார்.

Illustration
சமஷ்டி கோரிக்கை பிரிவினைவாதம், தேசத் துரோகம் | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
நிலுவையில் உள்ளவை

சமஷ்டி கோரிக்கை பிரிவினைவாதம், தேசத் துரோகம் | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்

DescriptionDetails & specsAttachments
பிரச்சனையும் பின்னணியும்:

2009 இல் யுத்த வெற்றியை பெற்ற இலங்கை, தாங்கள் தமிழ்த்தேசத்தை வென்றுவிட்டதாக எண்ணவும் தொடங்கியது. சிலர் தமிழ் மக்களை வென்றுவிட்டதாகவும் கருதினர். இன்னும் சிலர் தமிழ் மக்களிற்கான அதிகாரப் பகிர்வு, நீதி, உரிமை என்பவற்றை பற்றி இனி பேசத் தேவையில்லை என்றுமே வியாக்கியானம் செய்யத் தொடங்கினர்.

நீண்ட இழுபறியின் பின், அதாவது 4 வருடங்களின் பின்னர், 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி முதன்முறையாக வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்ற போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை இலங்கை தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு பெற்றுக் கொண்டது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானர்.

இவ் வெற்றியை கொஞ்சமும் எதிர்பார்க்காத சிங்கள தேசம், தமிழ் மக்கள் ஒன்றாக, ஒரு தமிழ்த்தேசமாக (Tamil State) வீட்டுச் சின்னத்தில் ஒன்றிணைந்ததை கண்டு, அச்சம் கொண்டனர். யுத்தவெற்றியின் அர்த்தம் இழந்ததாக பயந்தனர்.

ஆனால் சிலரோ, தமிழ் மக்கள் 70 ஆண்டு காலமாக போராடும் அதிகாரப் பகிர்வு, நீதி, உரிமை என்பவற்றிற்கான சட்டரீதியான வெளியை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயன்றனர்.

இதனால்; இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு நபர்களால் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரிவினைவாதம் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது என்ற முறைப்பாடுகளை முன்வைத்தனர்.

27 மாச் 2014 இல், ஹிக்காடு கோரலலாகே டொன் சந்திரசோம எனவர் அக்கால யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராஜாவிற்கு எதிராக வழக்கை தாக்கல் செய்தார். அவர் அப்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளராக இருந்தார்.

சந்திரசோமவின் வழக்கு நேரடியாக தமிழரசுக் கட்சியின் அரசியலமை எதிர்த்தே போடப்பட்டது. அவர் 2008 இல் மேற்கொள்ளப்பட்ட கட்சி யாப்பு சீர்திருத்ததில் 'சமஷ்டி' என்கின்ற சொல்லை "இணைப்பாச்சி" என்னும் சொல்லினால் மாற்ற முனைந்தது, தமிழரசு பெடரலிஸம் ('சமஷ்டி') ற்கு என்பதற்கு அப்பாற்சென்று பல தேசங்களின் கூட்டமைப்பு (கென்பிரடலிசம்) என்கிற நிலையை எடுப்பதாக அர்த்தம் கூறினார்.

"சமஷ்டி" என்பதற்குப் பதிலாக "இணைப்பாட்சி" என மாற்றப்பட்டது, ஏற்படுத்தப் பட்ட பல மாற்றங்களில் ஒன்றுதான், அது அரசியலமைப்பில் உள்ள சமஸ்கிருதச் சொல்லுக்குப் பதிலாக தூய தமிழ் சொல்லை மாற்றியது என்பதே தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடாக இருந்தது.

குறித்த விடயங்கள் அப்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பிரிவினைவாதத்தை மறுக்கும் சத்தியக்கடதாசி ஒன்றை தமிழரசுக் கட்சி வழங்குவதன் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும் என அவர் பரிந்துரைத்தார்.

2014 செப்டம்பர் 16 ஆம் தேதி இலங்கை தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாடுகளை பிரிவினைவாத நிலை என்று கூற முடியாது என்று சத்தியக்கடதாசி அளித்த போதும், ​​மனுதாரர்கள் அந்த சத்தியக்கடதாசியில் திருப்தியடையவில்லை என்றும், இந்த வழக்கை மேலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் கோரினர்.

எனவே, முன்னர் 2013 இல் தாக்கல் செய்யப்பட்ட ஆறு மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், மார்ச் 2014 இல் தாக்கல் செய்யப்பட்ட (3/2014) மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட போது, ராஜபக்‌ஷா அரசாங்கமே ஆட்சியில் இருந்தது.


சுமந்திரனின் நடவடிக்கை:

கட்சிக்காக நீதிமன்றில் தோன்றிய சுமந்திரன், ஐக்கிய இலங்கைக்குள் ஒரு கூட்டாட்சி அரசை நிறுவுவதற்கு ITAK ஆதரவளிக்கிறது அல்லது போராடுகின்றது என்கிற நிலையில் நின்று வாதாடினார்.

இதற்கிடையில் 2015ல் ஜனாதிபதி தேர்தல் நெருங்கியது. சுமந்திரன் ராஜபக்‌ஷா அரசாங்கத்தை மாற்றுவதற்காக பல முயற்சிகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கவுடன் சேர்ந்து முன்னெடுத்தர்.

ஏற்கனவே அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தம் மூலம் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரப்பட்டிருந்தது என்பதை கோடிட்டு காட்டினார்.


விளைவு:

ஆட்சிமாற்றதிற்கான முற்சிகளில் மைதிரிபல சிறிசேன ஜனாதிபதியானர். இதனை தொடர்ந்து பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ராஜனமா செய்தார். நீதிமன்ற நடவடிக்கைகள் அரசியல் தலையீடுகள் இன்றி இடம்பெற்றது.

ஐக்கிய இலங்கைக்குள் ஒரு கூட்டாட்சி அரசை நிறுவுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கிறது அல்லது வாதிடுகிறது என்பதும் நிறுவப்பட்டது.

இறுதி தீர்ப்பு 4 ஆகஸ்ட் 2017 அன்று வழங்கப்பட்டது.


பயன்:

இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சுயநிர்ணய உரிமை உள்ள மக்கள் கூட்டம் என்றும், அதை அவர்கள் உள்ளகமாக பிரயோகித்து சமஷ்டியை கோருவது பிரிவனைவாதம் இல்லை என்றும் தீர்ப்பளித்தது. இதற்கு தமிழரசுக் கட்சிக்கு உரிமை உண்டு என்ற வரலாற்று முக்கியத்துவமான தீர்பு பெறப்பட்டது.

இன்று, தமிழ்த் தேசிய கட்சிகளும் மக்களும் வெளியரங்கமாக தமிழ்த் தேசம், சமஷ்டி என்கின்ற சொல்லாடல்களுடன் அரசியல் பேசவும், சம்ஷ்டி ஆட்சிமுறை கோரிக்கையை முன்வைத்து அரசியல் செய்யக் கூடிய பொது வெளியை தந்துள்ளது.