பிரச்சனையும் பின்னணியும்:
தொல்லியல் திணைக்களம் தமிழரின் பாரம்பரிய அடையாளங்களை குறிவைத்து வழக்குகளையும் தாக்கல் செய்து வருவது யாவரும் அறிந்ததே. வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினர் மீது தொல்லியல் திணைக்களமும், பொலிஸாரும் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், வழக்கின்போது முன்னிலையாகவில்லை என்கிற குற்றத்திற்காகக் ஆலயத்தின் மூவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்தப் பிரச்சினையானது ஒட்டுமொத்த தமிழர்களுக்குமுரியது. ஏனெனில் சிவன் நம் அனைவருக்கும் உரியவராவார். அவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மனிதர்களாகிய நமக்கு அதிகமே உண்டு. அதனைத் தான் கடந்த காலங்களில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாக்களின்போது பார்த்தோம். நாட்டின் பல பாகங்களிலிருந்து அடியவர்கள் வந்தனர். வழிபட்டனர். சைவம் சார்ந்த அமைப்புக்கள் வந்தனர். யாத்திரைகள் செய்தனர். ஆனால் ஆலயத்தினருக்கு பிரச்சினை என்றபோது ஏங்கே போனார்கள்??
இவ்வழக்கு தொடர்பில் ஆலோசனை கூறிய துறைசார்ந்த பலரும் கூறிய விடயம், தொல்லியல் சட்டங்கள் மிக இறுக்கமானவை. இதில் ஒருவர் சிக்கினாலும் வெளியில் எடுப்பது சாத்தியமே அற்ற ஒன்று. ஒன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டப்பணத்தை செலுத்தி வெளியில் வரவேண்டும் அல்லது சிறையில் இருக்க வேண்டும் என்பதே ஆகும்.
சிங்கள தேசம் தமிழ்த்தேசிய பரப்பில் செயற்படும் நபர்களை கையால பயங்கரவாத தடைச்சட்டத்தையும், தமிழரின் இருப்பை தாக்குவதற்கு தொல்லியல் சட்டத்தையுமே ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
சுமந்திரனின் நடவடிக்கை:
வழக்கில் வாதாட வருவதாக சொன்ன 24 மணிநேரத்துக்குள் யாழ்ப்பாணத்திலிருந்து நெடுங்கேணி வரை சொன்று சரியான தகவல்களை நேரடியாகத் சேகரித்திருந்தார்.
24 மணித்தியால கால இடைவெளியில் வேண்டிய எல்லா தகவல்களையும் திரட்டி வழக்கை வெற்றிகர்மாக முகம்கொடுப்பது என்பது வேறு யாராலும் முடியாத காரியங்கள்!
விளைவு:
இவ் வழக்கின்போது முன்னிலையாகவில்லை என்கிற குற்றத்திற்காகக் கைதுசெய்யப்பட்டிருந்த ஆலயத்தின் மூவர் பிணையில் விடுதலையாகினர். இந்த விடுவிப்பை தன் வாதத்திறமையால் மேற்கொண்ட பெருமையும், திறமையும் ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ எம்.ஏ.சுமந்திரன் அவர்களையும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கனிஸ்ர சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் அவர்களையுமே சாரும்.
அத்துடன் இவ்வழக்கிற்காகவும் ஒரு சதம் பணத்தைக் கூட அவர்கள் பெறத் தயாராக இருக்கவில்லை என்பதெல்லாம் சிறந்த மனித மாண்பு!
பயன்:
தமிழ்த்தேசிய பரப்பில் செயற்படும் நபர்களை கையால பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசு பயன்படுதிவருகின்றபோதும் அதற்கெதிராக சுமந்திரன் செயலாற்றி வருவதோடு, தமிழரின் இருப்பை தாக்குவதற்கு தொல்லியல் சட்டத்தை ஆயுதமாக பயன்படுதிவருகின்றபோதும் அதற்கெதிராக சுமந்திரன் வெற்றிகரமாக செயலாற்றி வருவதனால், இவற்றுடன் நேரடியாக ஈடுபட்டுவரும் சாமனியர் நம்பிக்கையுடன் தைரியமாக பிரச்சனைகளை முகம்கொடுக்கிறார்கள்.