சுமந்திரனின் அரசியல் மற்றும் சமூகப் பணிகள்:

ஆரம்பத்தில் தமிழ்த்தேசியம் மற்றும் கட்சி சார்ந்த வழக்குகள் தொடர்பாகவும், அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக திறைமறைவில் செயற்ப்பட்ட இவர், 2010 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை (TNA) பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கை நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். பின்னர் 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்ப்பட்டு வந்தார்.
திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என விழிக்கப்பட்டும் ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்ததுமல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.
இவர் அன்றும் இன்றும் பல பொதுநல வழக்குகளை மக்களுக்காக இலவசமாக பேசி வருகின்றார்.

Illustration
வடக்கு மீனவர்களின் பிரச்சினையும் சுமந்திரனின் தனி நபர் சட்டமூலமும்
நிலுவையில் உள்ளவை

வடக்கு மீனவர்களின் பிரச்சினையும் சுமந்திரனின் தனி நபர் சட்டமூலமும்

DescriptionDetails & specsAttachments
இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடியினால் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்ற வடக்கில் வாழ்கின்ற மீனவர்கள் தொடர்பில் சுமந்திரன் என்ன செய்தார்?

வடக்கில் வாழுகின்ற மீனவர்களுக்கு பாரிய பிரச்சினையாக இருந்துவருகின்ற இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியினை கட்டுப்படுத்துவதற்கு சட்ட ரீதியான அணுகுமுறையினை உருவாக்குகின்ற விதத்தில் 2015 ஆம் ஆண்டு பாய்ச்சு பக்குரு வலை அல்லது மடிவலை பயன்படுத்துவதனை தடை செய்கின்ற தனி உறுப்பினர் சட்டமூலத்தினை (private member bill) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை 2017 ஆம் ஆண்டு சட்டமாக நிறைவேற்றியவர் சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள். இந்தச் சட்டம் நிறைவேற்றுப்படும் வரை, இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற போது அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டாலும், அவர்களைத் தண்டிக்கும் சட்ட ஏது (legal basis) இலங்கையில் இருக்கவில்லை. இந்த நிலையை மாற்றவே, சுமந்திரன் மடிவலை மீன்பிடித் தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில் இயற்றி நிறைவேற்றினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பணி பிரச்சினைகளையும் தேவைகளையும் அடையாளங்கண்டு அதற்கேற்ற சட்டங்களையும், கொள்கைகளையும் வகுப்பது. அமைச்சர்களின் பணி, அச் சட்டங்களையும், கொள்கைகளையும் அமுல்படுத்துவது. டக்லஸ் தேவாந்தா மீன்பிடித் துறை அமைச்சராக இருந்த வேளையிலும் கூட இழுவைப் படகுகளை இந்த சட்டத்தைக் கொண்டு முற்றாகத் தடுக்கத் தவறினார். தொடர்ந்து இழுவைப் படகுகளைத் தடைசெய்வதில் இலங்கை அரசாங்கத்தின் அசமந்தப் போக்கைக் கண்டித்து, 2021 இல் முல்லைத்தீவிலிருந்து, பருத்தித்துறை வரை மீன்பிடிப் படகுகளில் சென்று மாபெரும் கவனீயீர்ப்புப் போராட்டமொன்றையும் சுமந்திரன் நடத்தியிருந்தார். மேலும், வடக்கு மீனவர்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் அவர் சட்டத்தரணியாகப் பல வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகி வருகிறார்.

சுமந்திரனது தமிழ்த் தேசியம் மக்கள் நலனை முன்னிறுத்தியது. நிலமும், வாழ்வாதாரமும் இல்லாத தேசமொன்று நலிவடையும் என்ற யதார்த்தத்தை உணர்ந்தது.

அறிவார்ந்த தமிழ்த் தேசியத்தின் தெரிவு . . .

எம். ஏ. சுமந்திரன்

வீட்டுக்கு நேரே → ஒன்றிற்கு மேலே
🏠✅ 1️⃣✅