சுமந்திரனின் அரசியல் மற்றும் சமூகப் பணிகள்:

ஆரம்பத்தில் தமிழ்த்தேசியம் மற்றும் கட்சி சார்ந்த வழக்குகள் தொடர்பாகவும், அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக திறைமறைவில் செயற்ப்பட்ட இவர், 2010 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை (TNA) பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கை நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். பின்னர் 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்ப்பட்டு வந்தார்.
திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என விழிக்கப்பட்டும் ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்ததுமல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.
இவர் அன்றும் இன்றும் பல பொதுநல வழக்குகளை மக்களுக்காக இலவசமாக பேசி வருகின்றார்.

Illustration
தனியார் நிலங்களை 'புனிதப் பகுதிகள்' என பிரகடனப்படுத்தும் சட்டமூலம் | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
நிறைவு பெற்றவை

தனியார் நிலங்களை 'புனிதப் பகுதிகள்' என பிரகடனப்படுத்தும் சட்டமூலம் | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்

DescriptionDetails & specsAttachments
பிரச்சனையும் பின்னணியும்:

நவம்பர் 2011ல் இலங்கை அரசு, தனியார் காணி மீதான கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் மற்றுமொரு முயற்சியாக, மாநகர மற்றும் நகரப் பகுதிகளுக்குள் பொருளாதார, சமூக, வரலாற்று, சுற்றாடல் மற்றும் மத நோக்கங்களுக்காக காணிகளை சுவீகரிப்பதற்கான நகர மற்றும் கிராம திட்டமிடல் கட்டளைச் சட்டத்தில் புதிய சீர்திருத்தம் என்ற தோரனையில் முயற்சி ஒன்றை எடுத்திருந்தது.

(தனியார்) நிலங்களை சட்டரீதியான எந்த வழிகாட்டுதல்களும் இல்லாமல் 'புனிதப் பகுதிகள்' என பிரகடனப்படுத்தும் அதிகாரத்தை புத்தசாசன அமைச்சருக்கு வழங்குவதற்கே இந்த சட்டமூல ஏற்பாடு ஆகும்.


சுமந்திரனின் நடவடிக்கை:

இந்த நகர மற்றும் நாடு திட்டமிடல் கட்டளை (2011) திருத்த மசோதாவை சவால் செய்ய உச்ச நீதிமன்றில் சுமந்திரன் ஆஜராகி, அரசியலமைப்பின் பிரிவு 154 (G) (3) இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைக்கு முரணாக இந்த மசோதா உள்ளதால், இது சட்டமாக முடியாது என்று வாதிட்டர்.

அதாவது நிலம் ஒரு பகிர்ந்தளிக்கப்பட்ட பொருள் என்றும், எனவே, நாட்டில் உள்ள 9 மாகாண சபைகளின் (13ம் திருத்ததில் உள்ளபடி) கருத்தை அல்லது முடிவை பெற்றுக்கொள்ளாமல் இம் மசோதாவை நிறைவேற்ற முடியாது என்றும் வாதிட்டார்.


விளைவு:

உச்ச நீதிமன்றம் இந்த மசோதா அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்மானித்தது.


பயன்:

அரசாங்கம் மசோதாவை திரும்பப் பெற்றது. மேற்கூறிய மசோதா, நிறைவேற்றப்பட்டிருந்தால், நாட்டில் உள்ள எந்தவொரு தனியார் சொத்துக்கள் மீது புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சருக்கு பெரும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும்.