பிரச்சனையும் பின்னணியும்:
போர் முடிந்த கையோடு இலங்கை அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட இனம் / மதத்துடன் தங்களை அடையாளம் காணும் அரசியல் கட்சிகளை தடை செய்வதற்கான 'பாராளுமன்ற தேர்தல் திருத்த மசோதாவை' ஆகஸ்ட் 6, 2009 இல் பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தது. இது பாராளுமன்ற பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்டால், 50 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சி உட்பட EPDP, SLMC, தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி போன்ற சிறுபான்மை கட்சிகளுக்கான சட்டபூர்வமான தடை ஏற்படுவது மட்டுமல்லாமல், இப்பெயர்களில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான தகுதியும் இல்லாமல் போயிருக்கும்.
1949 டிசம்பர், 18ல் நிறுவப்பட்ட சமஷ்டி கட்சியின் வரலாறும் அதன் பின்னணியும் அனைவரும் அறிந்ததே. குடியுரிமைச் சட்டம் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது தந்தைச் செல்வா, மருத்துவர் ஈ.எம்.வி.நாகநாதன், க.வன்னியசிங்கம் ஆகியோர் எதிர்க்கட்சியாக நின்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து பிரிந்து அரசுக்கு எதிராக வாக்களித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியையும் உருவாக்கினர். ITAK அல்லது பெடரல் கட்சி என அறியப்படுகிறது.
மே மாதம் தனது யுத்த வெற்றி உரையில், ஜனாதிபதி ராஜபக்ஷா போர் "சிறுபான்மையினர்" என்ற வார்த்தையை நமது சொற்களஞ்சியத்தில் இருந்து நீக்கிவிட்டது" என்று அறிவித்திருந்தார்.
சுமந்திரனின் நடவடிக்கை:
தடைசெய்யக் கோரும் மசோதாவுக்கு சவாலாக இலங்கை தமிழ் அரசு கட்சிக்காக சுமந்திரன் தோன்றினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA), ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) உட்பட பல அரசியல் கட்சிகள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்தன.
விளைவு:
ஆகஸ்ட் 15 அன்று, தேர்தல் சீர்திருத்தத்திற்கான நாடாளுமன்றக் குழுவில் உள்ள அரசாங்கப் பிரதிநிதிகள் அந்த மசோதான் குறித்த பகுதிகளை நீக்க ஒப்புக்கொண்டனர்.
பயன்:
இன்றும் சிறுபாண்மை கட்சிகள் தங்களுடைய இனம் சார்ந்த அடையாளத்துடன் சட்டரீதியாக அரசியல் ஈடுபட அன்று சுமந்திரன் நீதிமன்றமூடாக எடுத்த நடவடிக்கையே காரணம்.