சுமந்திரனின் அரசியல் மற்றும் சமூகப் பணிகள்:

ஆரம்பத்தில் தமிழ்த்தேசியம் மற்றும் கட்சி சார்ந்த வழக்குகள் தொடர்பாகவும், அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக திறைமறைவில் செயற்ப்பட்ட இவர், 2010 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை (TNA) பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கை நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். பின்னர் 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்ப்பட்டு வந்தார்.
திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என விழிக்கப்பட்டும் ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்ததுமல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.
இவர் அன்றும் இன்றும் பல பொதுநல வழக்குகளை மக்களுக்காக இலவசமாக பேசி வருகின்றார்.

Illustration
2.75 பில்லியன் டொலர் E-விசா ஊழல்; GBS, IVS மற்றும் VFS ற்கு முறைகேடாக வழங்கப்பட்ட சலுகை | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
நிலுவையில் உள்ளவை

2.75 பில்லியன் டொலர் E-விசா ஊழல்; GBS, IVS மற்றும் VFS ற்கு முறைகேடாக வழங்கப்பட்ட சலுகை | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்

DescriptionDetails & specsAttachments
பிரச்சனையும் பின்னணியும்:

2024 ஏப்ரலில், ரணில் அரசாங்கம் புதிய ஒரு விசா முறையைத் தேர்ந்தெடுத்தது. இதற்கு GBS, IVS மற்றும் VFS ற்கு என்கின்ற தனியார் நிறுவனங்களுக்கு, நாட்டிற்கு 2.75 பில்லியன் டொலர் வரையிலான இழப்பு ஏற்ப்படும் விதமாக, இந்த ஒப்பந்தம் முறைகேடாக வழங்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இலங்கையின் விசா கட்டணம் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்தது. இது முக்கிய அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் நாட்டின் சுற்றுலாத் துறையில் மீது, பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய விசா முறைமை மாற்றப்படும் வரை, ஒவ்வொரு மாதமும் 2 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்தது, அதன் பிறகு எண்ணிக்கை குறைந்தது, இதை இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தால் வெளியிடப்பட்ட தரவு காட்டுகிறது.

ஆகஸ்ட் 2024 வரை 13 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர், இதன் மூலம் $2 பில்லியனுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது. விசா கட்டணத்தில் இருந்து விலக்கு பெற்றவர்களில் இந்திய சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.


சுமந்திரனின் நடவடிக்கை:

ரணிலின் இந்த விசா ஒப்பந்தத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஒப்பந்தம் வெளிப்படையாக வழங்கப்படவில்லை என்றும், 16 வருட காலப்பகுதியில் $2.75 பில்லியன் வரை வருமானம் ஈட்ட வேண்டும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

ஆகஸ்ட் 02 அன்று, உச்ச நீதிமன்றம் சுமந்திரனின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, புதிய E-விசா முறைமைக்கு ஒரு இடைக்காலத்தடை உத்தரவை வழங்கியது.

செப்டெம்பர் 13ல், இலத்திரனியல் விசா விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியமை தொடர்பில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டெம்பர் 15ல், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி e-விசா முறை இடைநிறுத்தப்படுவதை நடைமுறைப்படுத்தத் தவறியதன் காரணமாக, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு எதிராக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அவசரமாக வெளிநாட்டிற்கு பறந்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல், செப்டெம்பர் 22ல் நாடு திரும்புவதாக மன்றிற்கு அறிவித்திருந்தார். ரணில் புதிய ஜனாதிபதி ஆனதும் விடயங்களை வேறு முறையில் கையாளுவதே இவர்களின் திட்டத்தின் சூட்சமமாகும்.


விளைவு:

செப்டெம்பர் 25ல், இலத்திரனியல் விசா நடைமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியமைக்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இல்லுக்பிட்டிய உயர்நீதிமன்றத்தால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு தினைக்களத்தின் இரண்டாம் நிலை அதிகாரி, பழைய விசா முறைமைக்கு மாற்றுவதற்கான இடைக்காலத்தடை உத்தரவை நடைமுறைப்படுத்தினார்.

இவ்வழக்கு வருகின்ற வருடம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.



பயன்:

சுமந்திரனின் இந்த சட்டநடவடிக்கையை தொடர்ந்து செப்டெம்பர் 25 இரவு, பழைய விசா முறைமை மீளக் கொண்டுவரப்பட்டது. 26ஆம் திகதி புதிய ஜனாதிபதி தனது X (டுவீட்டர்) பக்கம் மூலம் இதை நாட்டுமக்களுக்கு அறிவித்தார்.

ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு முன் இருந்த அளவுகோலின்படி, ஒன்-அரைவல் விசாக்களை வழங்குவதற்கான மின்னணு பயண அங்கீகாரம் (ETA) செயல்முறையை குடிவரவு அதிகாரிகள் இப்போது மீட்டெடுத்துள்ளனர், அதைக் கையாண்ட தனியார் கூட்டமைப்பு IVS-GBS மற்றும் VFS Global ஆகியவற்றைத் தவிர்த்துள்ளனர்.