- தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் பாரியது.
தமிழ் அரசியற் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமென கடந்த 15 வருடங்களாக உழைத்தவனாக, மக்களின் மாற்ற வேட்கையைக் கண்டு நானும் மகிழ்கிறேன்.
தமிழரசுக் கட்சியின் யாழ்த் தேர்தல் மாவட்ட வேட்பாளர் நியமனங்களும் மக்களது மாற்ற வேட்கையைப் பிரதிபலிப்பதாகவே நான் நம்புகிறேன். பேச நிறைய இருக்கிறது. பேசுவோம்.
சுமந்திரனை சந்தியுங்கள்
மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், 1964 ல் இணுவில் மெக்லியோட் மருத்துவமனையில், யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றில் பிறந்தார். கொழும்பில் தனது பாடசலைக் கல்வியை முடித்த இவர், தலைநகரில் அக் காலப்பகுதிகளில் இடம்பெற்ற இனக்கலவரங்கள் காரணமாக சென்னைக்கு இடம்பெயர்ந்து சென்று; அங்கு தனது பொளதீகவியல் (B.Sc. Physiscs) பட்டப்படிப்பை நிறைவு செய்தார். அதை தொடர்ந்து இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று 1991 இல் சட்டத்தரனியானார். இவர் 2001 இல் அவுஸ்ரேலியவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் இணையம் மற்றும் மின்னணு சட்டத்தில் LLM பட்டம் பெற்றார்.
இவர் பல பொதுநல, அடிப்படை மனித உரிமை மற்றும் அரசியலமைப்பு சார்ந்த பல வழக்குகளில் தோன்றி, வெற்றிகரமான தீர்ப்புக்களை பெற்றுத்தந்தார். யுத்த காலத்தில் இவரது துணிச்சலான மனித உரிமைப் செயற்பாடுகளின் நிமித்தம், முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் கீழ் இலங்கை பாதுகாப்பு அமைச்சு இருந்தபொழுது, இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டு, "கருப்பு அங்கி அணிந்த துரோகி" என்று முத்திரை குத்தப்பட்டார்.
ஆரம்பத்தில் தமிழ்த்தேசியம் மற்றும் கட்சி சார்ந்த வழக்குகள் தொடர்பாகவும், அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக திறைமறைவில் செயற்ப்பட்ட இவர், 2010 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை (TNA) பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கை நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். பின்னர் 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்ப்பட்டு வந்தார்.
ஆட்புலம்
நாம் வாழும் பிரதேசம். இது பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான பல நூற்றாண்டு காலமாக தமிழ்மக்கள் வாழ்ந்து வரும் பூர்வீக நிலப்பரப்பை பற்றியதாகும். வடக்கு கிழக்கு நிலப்பரப்புகள் மட்டுமல்ல இங்குள்ள சமய கலாச்சார பண்பாட்டு அடையாளங்களும் இன்றும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது. இராணுவமயப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலய தனியார் காணிகள், சட்ட விரோத குடியேற்றங்களூடான குடியியல் பரம்பல் மாற்றங்கள், தொல்பொருள் தினைக்களத்தின் சட்ட விரோத செயற்பாடுகளூடான தாயக சமய மற்றம் கலாச்சார அடையாளங்களின் சிங்கள-பெளத்த மயமாக்க முன்னெடுப்புக்கள் என்பன நாம் எதிர்நோக்கும் ஆட்புலம் சார்ந்த பிரச்சனைகளாகும்.
ஆதாரம்
இது எமது அடிப்படையான வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பற்றியதாகும். போருக்கு பின்னான தமிழ்ச்சமூகம் இன்று பரந்துபட்ட பொருளாதார நிலமைக்களுடனும் வாழ்வாதார இன்னல்களுடனும் உள்ளது. பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள், மதுபானம் மற்றும் போதைவஸ்து பாவனையினால் சிதைக்கப்பட்டுள்ள குடும்பங்கள் என பாரிய வாழ்வாதார பிரச்சனைகளுக்கு நாம் முகம்கொடுக்கின்றோம். மீன்பிடி மற்றும் கடல்வளம், மேச்சல்நிலம், பயிர்ச்செய்கை, வியாபாரம் என்பவற்றில் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ள சட்ட விரோத நெருக்கங்கள் மேலும் எமது வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
ஆளுகை
எமக்கான சுய ஆளுகை, மொழியுரிமை மற்றும் சட்டத்தின் ஆட்சி பற்றியதாகும். ஒரு தனித்துவமான மக்கள் கூட்டமாக இலங்கைவாழ்த் தமிழர்களாகிய நாம் சுயநிர்ணய உரிமை மற்றும் சுயாட்சி உள்ளவர்கள். ஆதிப்பலங்குடி மக்களின் மொழியாம் தமிழ்மொழி; அது எம் தாய்மொழி. தமிழ்மொழியுடன் இணைந்த எமது அடையாளமும் அங்கிகாரமும் எனது அடிப்படை உரிமை. அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சி முறைமை என்பதே எங்களது இலக்கு மட்டுமல்ல நீடித்த தமிழ்த்தேசியப் பிரச்சனைக்கான யதார்த்தமான தீர்வு. ஏற்கனவே உள்ள சீர்திருத்தங்கள் மற்றும் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப் படும்போதே ஆட்புலம் மற்றும் ஆதாரம் தொடர்பில் உள்ள பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு எட்டப்படும்.
இன்று எங்கள் முன்னே
தமிழ்த்தேசிய பிர்ச்சனை
ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என மேலே விழிக்கப்பட்ட நெடுநாள் பிரச்சனைகள்
ஊழலற்ற ஆட்சி
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என உயிர் காக்கும் ஒளடதம் முதல் நாம் உண்ணும் அன்னம் வரை ஊழல்.
வாழ்வாதாரம் மற்றும் இருப்பு
ஒரு பேரினமாக தமிழர் தம் இருப்பும், தனி மனிதனாக ஒவ்வொருவரினதும் நாளாந்த வாழ்க்கையும்..
தற்போது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனதிபதியின் கட்சியினர் மாற்றத்துக்கான அரசியல் பயணத்தில் தம்மோடு இணைந்து கொள்ளுமாறு எமது மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். அந்த மாற்றத்துக்கான போராட்டத்தில் நாம் ஈடுபட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
ஆனால் எமது மக்கள் தொடர்ச்சியாக முக்கால் நூற்றாண்டு காலம் உரிமையோடு தேடுகிற ஆட்சிமுறை மாற்றத்தை அடைய வேண்டுமாக இருந்தால், அந்த ஆட்சிமுறையை (சமஷ்டி) அச்சாணியாக கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, எமது மக்களின் அடையாளத்தை தொடர்ந்து பேணும் வகையிலான மாற்றத்துக்கு வழி செய்வதை நாம் ஆதரித்து வலுப்படுத்த வேண்டும்.
வடக்கையும் கிழக்கையும் பிரதிநிதித்துவம் செய்து பாராளுமன்றுக்கு ஒரு வலுவான அணியை அனுப்பக் கூடிய ஆற்றல் எமது கட்சிக்கு மட்டுமே உண்டு!
ம. ஆ. சுமந்திரன்
சுமந்திரனின் பணிகள்:
திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என மேலே விழிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்ததுமல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.
பாராளுமன்ற தேர்தல் 2024
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
சொல்வன்மை
ஏன் கடுமையான விமர்சனங்கள்?
போருக்கு பின்னான இலங்கை அரசியலில்; தமிழ்த்தேசிய விடயங்களுக்காக மட்டுமல்லாது, நாட்டின் பல சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துவருவதால், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாவது இயல்பான ஒன்றே! ஆயினும் சமூகதளங்கலில் பகிரப்படும் பல விமர்சனங்கள் உண்மைக்கு புறம்பானவையும் திரிவுபடுத்தப்பட்டவையுமே. மேலும் அறிய....
அரசியலில் தேடிய சொத்து விபரம் என்ன?
சுமந்திரன் ஒரு ஆற்றல் மிக்க சட்டத்தரனியாவார். வரலாற்று முக்கியமான பல வர்த்தக வழக்குகளை இவர் தன்னுடைய அரசியல் ஈடுபாட்டுக்கு முன்னான காலப்பகுதியில் வாதாடி வெற்றியும் பெற்றார். தற்போதும் தொழில் ரீதியாக சட்டத்தரனியாக பணிபுரிகின்றார். தனது சொத்து விபர்ங்களை வெளியிட்ட ஒரிரு பாராளுமன்ற உறுப்பினர்களுள் சுமந்திரனும் ஒருவர். மேலும் அறிய....
சுமந்திரனின் அரசியல் வாரிசு யார்?
இவருடைய பிள்ளைகள் மூவரும் தமக்கென்று தனித்துவமான அடையாளத்துடன் வெவ்வேறு துறைகளில் கல்விகற்று வாழ்ந்து வருகின்றனர். குடும்ப அரசியலோ அல்லது அரசியல் அடையாளமோ இல்லாமல் சாதாரண வாழ்க்கையை நடாத்தும் இவர்களை நம்மில் பலருக்கு யார் என்றே தெரியாது. மேலும் அறிய...
தனது ஆற்றலையும் வளங்களையும் எவ்வாறு பயன்படுத்துகின்றார்?
சட்டதுறையில் தனக்குள்ள புலமையையும் அனுபவத்தையும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பல பொதுநல வழக்குகளிலும், அநீதிக்கெதிராக தனிநபர் சார் வழ்க்குகளிலும் இலவசமாக பயன்படுத்தி வருகின்றார். இரு வேறு தரப்பினருக்கு இடையிலான பிணக்குகளை சுமூகமாகவும் நீதியாகவும் தீர்ப்பதற்காக பல மணிநேரங்களை சமூகப்பொறுப்புடன் செலவிடுகின்றார். மேலும் அறிய...